இளையராஜா

இன்று தற்செயலாக Hans Zimmerஐக் கேட்டுக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளாக ஹான்ஸ் ஸிம்மரைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். லயன் கிங் (1994) பார்த்த போது அவரது தீவிர ரசிகனாக மாறினேன். ஸிம்மரின் சாதனைகள் Gladiator, Interstellar, Inception என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சமயங்களில் எனக்கு இலக்கியத்தில் போர்ஹெஸ் எப்படியோ அப்படித்தான் ஸிம்மரும் என்று தோன்றும். இன்ஸெப்ஷனையும் இண்டர்ஸ்டெல்லாரையும் பார்த்த போதும் கேட்ட போதும் அப்படித் தோன்றியது.

ஒரு நபர் நிறைய படிக்கிறார். லட்சுமி, குரும்பூர் குப்புசாமி, பாக்கியம் ராமசாமி, ஹேமா ஆனந்ததீர்த்தன், புஷ்பா தங்கதுரை, ஜெகசிற்பியன் என்று படித்துக்கொண்டே இருப்பார். கடைசியில் கல்கிக்கு வந்து சேர்ந்து பொன்னியின் செல்வனைப் படித்து விட்டு, அதற்கு மேல் எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார். மற்றபடி அவர் அசோகமித்திரன் பெயரைக் கேள்விப்பட்டதில்லை. நகுலன் தெரியாது. கு.ப.ரா. தெரியாது. தி.ஜா. தெரியாது. கரிச்சான் குஞ்சு தெரியாது. தஞ்சை ப்ரகாஷ் தெரியாது. க.நா.சு. தெரியாது. புதுமைப்பித்தன் தெரியாது. கல்கிதான் ஆக உச்சம். பொன்னியின் செல்வன் உச்சத்தின் உச்சம். அந்த மாதிரி நிரட்சரகுட்சிகள்தான் இளையராஜா ரசிகர்கள்.

கீழே இன்ஸப்ஷன் படத்தின் இரண்டரை மணி நேர இசையைக் கொடுத்திருக்கிறேன். இளையராஜா எல்லாம் ஸிம்மரின் நிழலைக்கூடத் தொட முடியாது. எப்படி நகுலனையும் புதுமைப்பித்தனையும் கல்கி தொட முடியாதோ அப்படி.

https://www.youtube.com/watch?v=PgKNZaA2KXc