echoes in the void

இன்று மாலை ஏழு மணியிலிருந்து ஒரு கவிதை எழுத ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில். தமிழில் எழுதினால் பிரச்சினை ஆகி விடுகிறது. தலைப்பு மேலே. அதன் கடைசிப் பத்தியைத் திரும்பத் திரும்ப எழுத வேண்டியிருந்தது. ஒன்று, வெளிப்படையாக இருந்தது. அது கவிதைக்கு அழகல்ல. இன்னொன்று, யாருக்கும் புரியாது. அதனால் இடைப்பட்ட நிலையில் அதை எழுதினேன். அதற்கே ஒரு மணி நேரம் ஆனது. கவிதையை சஞ்ஜனாவுக்கு அனுப்பியிருக்கிறேன். வந்ததும் இங்கே பதிவிடுவேன்.

ஐரோப்பிய சினிமா காணொலி

பாண்டிச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் நடந்த ஐரோப்பிய சினிமா அறிமுகப் பட்டறையின் காணொலி தயாராகி விட்டது. அதற்குரிய கட்டணம் அனுப்பியவர்களுக்கு என் நண்பர் ராஜா வெங்கடேஷ் காணொலியை அனுப்பிக்கொண்டிருக்கிறார். பணம் அனுப்பி காணொலி கிடைக்காதவர்கள் எனக்கு எழுதவும். charu.nivedita.india@gmail.com

லும்பன் சமூகம்: அராத்து

சாரு என்றாலே வம்புதான் என்ற கருத்து சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. அதாவது , அவருகிட்ட வச்சிக்கக்கூடாது, எதுக்கெடுத்தாலும் சண்ட போடுவாரு, திட்டிடுவாரு என்ற கருத்து சமூகத்தில் பலரிடமும் வேரூன்றி நிற்கிறது. ஆனால் சாரு, இதுவரைக்கும் நான் யார் வம்பு தும்புக்கும் போனதில்லை, மத்தவங்கதான் எங்கிட்ட வம்புக்கு வந்து சும்மா இருக்கும் என் சூத்தைக் கடிக்கிறார்கள் என்று கோபமாகச் சொல்கிறார். லலிதா ராம் என்பவர் எழுதியிருந்ததைப் பகிர்ந்து, அதற்கு பதிலளித்து நீண்ட கட்டுரை எழுதியிருந்தார் சாரு. அதனால் … Read more

தடுக்கி விழுந்தவனைப் பார்த்து கைதட்டி மகிழும் லும்பன்கள்!

டேய் அம்பி, நீ என்னை அண்ணாவாக பாவித்து என்னை “நீ” என விளித்திருப்பதால் நானும் உன்னை என் தம்பியாக பாவித்து டேய் என விளித்திருக்கிறேன். மற்றபடி உன்னை டேய் என்று திட்டி விட்டேன் என்று குதிக்காதே. பின்வரும் பதிவை செப்டம்பர் 30 அன்று எழுதியிருந்தேன்: ”இரண்டொரு தினங்களுக்கு முன் மகாபாரதக் கதையில் ஒரு பிழை விட்டேன். பெருந்தேவி சுட்டிக் காட்டி கடிதம் எழுதினார். திருத்திக் கொண்டேன். இப்போது அதைவிடப் பெரும் பிழை, ஸ்வர ராக ஸூதாரஸ கீர்த்தனையை … Read more

கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா: அராத்து

ஐந்து ஆண்டுகளுக்கு முன், அரூ பத்திரிகையில் அராத்து என்னைப் பற்றி எழுதிய இந்தக் கட்டுரை என்னைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளில் முக்கியமானது. படித்துப் பாருங்கள். (புகைப்படம்: மது) கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா | அரூ

குறை கூறும் போது கவனம் தேவை…

டியர்சாரு,வணக்கம் எல்லாரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடுகுறுநாவலை ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். Pleasure of the Text ஐ உங்கள் எழுத்தில் மீண்டும் ஒரு முறை உணர்ந்து மகிழ்ந்தேன். திரு பாலசுப்ரமணியன் அவர்களின் கடிதத்தில், தாங்கள் எக்ஸ் பதிப்பகத்தின் ராயல்டியைப் பற்றி குறிப்பிடவில்லை என்று கூறியிருந்தார். நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி! டாக்டர் முரளீதரன்