லும்பன் சமூகம்: அராத்து

சாரு என்றாலே வம்புதான் என்ற கருத்து சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. அதாவது , அவருகிட்ட வச்சிக்கக்கூடாது, எதுக்கெடுத்தாலும் சண்ட போடுவாரு, திட்டிடுவாரு என்ற கருத்து சமூகத்தில் பலரிடமும் வேரூன்றி நிற்கிறது. ஆனால் சாரு, இதுவரைக்கும் நான் யார் வம்பு தும்புக்கும் போனதில்லை, மத்தவங்கதான் எங்கிட்ட வம்புக்கு வந்து சும்மா இருக்கும் என் சூத்தைக் கடிக்கிறார்கள் என்று கோபமாகச் சொல்கிறார்.

லலிதா ராம் என்பவர் எழுதியிருந்ததைப் பகிர்ந்து, அதற்கு பதிலளித்து நீண்ட கட்டுரை எழுதியிருந்தார் சாரு. அதனால் இரண்டையும் வாசிக்க நேர்ந்தது. லலிதா ராம் என்பவர் கர்நாடக சங்கீத இசை விமர்சகர் போல, எனக்கு இதுநாள் வரை தெரியாது. கர்நாடக சங்கீத இசை விமர்சகர்களுக்கு அராத்து, கோபி கிருஷ்ணன் எல்லாம் தெரியாது அல்லவா? அதைப்போலத்தான் இதுவும். நார்மல் தான்.

அடடா, சமூகம் நினைப்பது போல சாரு வம்பு பிடித்த ஆள்தான் போல. கர்நாடக சங்கீத இசை விமர்சகரிடம் எல்லாம் போய் வம்பு வளக்கிறாரே, என்றுதான் நினைத்துக்கொண்டே படிக்க ஆரம்பித்தேன். நோம் சாம்ஸ்கி – வாட்டாள் நாகராஜ் போல இதென்ன விசித்திரமான காம்பினேஷன் எனத் தோன்றியது. சாரி , நோம் சாம்ஸ்கி – வாட்டாள் நாகராஜ் கூட ஒரு காம்பினேஷனில் வந்து விடலாம். எலான் மஸ்க் – வாட்டர் மெலன் ஸ்டார் என வைத்துக்கொள்ளலாம்.

பார்த்தால், சாரு பஞ்ச ரத்ன கீர்த்தனை என்றோ அல்லது அதுபோல என்ன எழவோ, அதை டெக்னிக்கலாக தவறாகக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அடுத்த நாளே அந்தத் தவறைச் சுட்டிக்காட்டியவுடன், தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டு எழுதியிருக்கிறார். (டேட்டா தவறுக்கெல்லாம் மன்னிப்புக் கோரவேண்டிய அளவுக்கு அவசியமில்லை – அராத்து)

இந்த லலித் ராம் என்பவர் சாரு எழுதிய பிளாகின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்துப்போட்டு நக்கலாக கிண்டலாக மரியாதை குறைவான மொழியில் ஒரு பதிவு செய்திருக்கிறார். யார் முதலில் வம்பை ஆரம்பித்து இருப்பது?

தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர், இவர்கள் மொழியில் சொல்வதானால் – தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர்- அப்படிப்பட்ட எழுத்தாளரை மனதில் நினைத்தாலே ஒரு பயம் கலந்த மரியாதை வர வேண்டும் அல்லவா? அவரைப்பற்றி எழுத நினைத்தால், அதுவும் அடா புடா என்ற தொனியில் எழுத நினைத்தால் கைக்கூச வேண்டும் அல்லவா? இது எதுவும் பில்ஸ்டைன் சொசைட்டில் வாழும் அங்கத்தினருக்கு ஆகாது.

ஓர் எழுத்தாளரின் படைப்பை எந்த அளவுக்கும் இறங்கி விமர்சிக்கலாம், அது வேறு. ஆனால் ஒரு எழுத்தாளரைப் பற்றி எழுதும்போது மனதில் மரியாதை உண்டாக வேண்டும். அது அந்த எழுதும் தொனியில் எதிரொலிக்க வேண்டும். இதெல்லாம் நாகரிகமான, அறிவார்ந்த சென்ஸிபிள் சொசைட்டியில் தான் எதிர்பார்க்க முடியும். பன்றித்தொழுவத்தில் எப்படி எதிர் பார்க்க முடியும்?

பூனை மேல் மதில் போல என ஸ்டாலின் வாய் தவறிப் பேசியதை இந்த க.ச.இ. விமர்சகர் எடுத்துப்போட்டு இதே போன்ற மரியாதை இல்லாத தொனியில் கிண்டல் அடித்துப் பதிவு போடுவாரா?

இளையராஜா கர்நாடக சங்கீதத்தைப் பற்றிப் பேசுகையில், கவனப் பிசகால் தவறுதலாக ஏதோ சொல்லிவிட்டால், இதே போல மரியாதை கெட்ட மொழியில் இவர் எழுதுவாரா?

அது எப்பிட்றா எழுத்தாளன் என்றவுடன் வறட்டுத் திமிரும் தெனாவட்டும் குதித்துக்கொண்டு வருகிறது?

மற்ற எல்லோரிடமும் சூத்தைப் பொத்திக்கொண்டு பயத்துடன் மரியாதையுடன் இருந்துகொண்டு, அது என்ன எழுத்தாளர் என்றவுடன் அதிகாரமும், அத்தாரிட்டியும், வன்மமும் துருத்திக்கொண்டு வருகிறது?

எழுத்தாளன் இயல்பாக இறங்கி வந்து தோள் மீது கை போட்டுத் தோழன் போல பேசுவதால் வரும் இளக்காரம் இது. அப்படிப் பேசுபவன் மேல்தான் இன்னும் மரியாதை கூட வேண்டும், அதை எழுத்தாளர்களே விரும்பாவிடினும். இதையெல்லாம் படித்த பண்பட்ட மனிதர்களிடம் மட்டுமே எதிர்பார்க்க முடியும். வெள்ளையும் சொள்ளையுமாகத் திரியும் மூடர் கூட்டத்திடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

இங்கே தமிழ் நாட்டில் மற்ற அனைவரிடத்திலும் கைகட்டி வாய்ப்பொத்தி நிற்கும் கேவலமான கூட்டம் , எழுத்தாளன் என வந்து விட்டால் தனது ஆங்காரத்தையும், வன்மத்தையும் , கோரைப்பற்களையும் காட்டித் தன்னை இன்னும் கீழ்மைப் படுத்திக்கொள்கிறது.

அராத்து