புத்தக விழா – 9 (இலவச சேவை)
தினந்தோறும் புத்தக விழாவில் ஏதாவது சுவாரசியமான சம்பவங்கள் என்னிடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நேற்று அப்படி ஒன்று. ஒரு மத்திய வயதுக்காரர். லக்ஷ்மி சரவணகுமாரின் ஏழெட்டு புத்தகங்களை என்னிடம் கொடுத்து என் கையெழுத்தைக் கேட்டார். கேட்கும்போதே, “உங்களுடைய புத்தகங்கள் என்னிடம் ஏற்கனவே இருக்கின்றன” என்றார். அது பொய் என்பது அவர் சொன்னவுடனேயே புரிந்து விட்டது. அது எப்படி என்னுடைய புத்தகங்கள் அனைத்தும் அவரிடம் இருக்க முடியும்? எண்பது புத்தகங்கள் இருக்கின்றன. அதிலும், சுக்கு இஞ்சி கடுக்காய் என்ற நூல் … Read more