echoes in the void
இன்று மாலை ஏழு மணியிலிருந்து ஒரு கவிதை எழுத ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில். தமிழில் எழுதினால் பிரச்சினை ஆகி விடுகிறது. தலைப்பு மேலே. அதன் கடைசிப் பத்தியைத் திரும்பத் திரும்ப எழுத வேண்டியிருந்தது. ஒன்று, வெளிப்படையாக இருந்தது. அது கவிதைக்கு அழகல்ல. இன்னொன்று, யாருக்கும் புரியாது. அதனால் இடைப்பட்ட நிலையில் அதை எழுதினேன். அதற்கே ஒரு மணி நேரம் ஆனது. கவிதையை சஞ்ஜனாவுக்கு அனுப்பியிருக்கிறேன். வந்ததும் இங்கே பதிவிடுவேன்.