நூற்றாண்டுகளின் புறக்கணிப்பு
சங்கப் புலவர்கள் பிச்சைக்கோப்பைளோடுமன்னன் அருகே நின்றுசொற்களைக் கோர்த்தனர் பாரதிசோற்றுக்காயின் உள்ளேசூரியனை விதைத்தான்;அதுவோ பசியில் வெடித்தது.அவன் இறந்த பின்அவன் முகம்எல்லா வீதிகளிலும்முண்டாசுடன் தொங்கியது உயிரோடு இருந்தால்கழுத்தில் கயிறுசெத்த பின்—அதே கழுத்தில்மலர்மாலை; உயிருக்கு செருப்படி,பிணத்துக்கு மாலை—இரண்டுக்கும் நடுவில்என் இனம்ஒரு சடங்கு போலகொடூரத்தைக் காபந்து பண்ணுகிறது மரணம் இங்கேஒரு விழா,உயிர் அவமானம். எனக்குக் கசப்பில்லை, நண்பா,இந்தக் கவிதைகண்ணீர் அல்ல;எரியும் நாக்கு.எதிர்ப்பின் குரல்—காலத்தின் செவிகளில்அறையும் பிளிறல் கொண்டாட வேண்டுமென்றால்இன்றே வா—இன்னும் சூடாகவே இருக்கும்என் உடலைத் தழுவு. உன்னிடம் என் உயிரினும்மேலானதோர் விஷயம் சொன்னேன்உன்னிடமிருந்து … Read more