பீச்: கார்ல் மார்க்ஸ்

வருகின்ற ஜனவரி மூன்றாம் தேதி மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள காஸ்மபாலிடன் கிளப்பில் கார்ல் மார்க்ஸின் இரண்டாவது நாவலான பீச் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அழைப்பிதழ் இன்னும் எனக்குக் கிடைக்காததால் சரியான நேரம் தெரியவில்லை. வெளியீட்டு விழாவில் நானும் பேசுகிறேன். நாவலை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். முன்னுரையில் கார்ல், வாசிப்பு இன்பம் பற்றிச் சொல்லியிருப்பதாலும், நாவலை அடியேனுக்கு சமர்ப்பணம் செய்திருப்பதாலும் நாவலை வாசிக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் நான் எழுதியிருந்த எல்லோரும் இன்புற்றிருக்க ஓர் … Read more

புத்தாண்டு வேண்டுதல்

முன்னொரு காலத்தில் ஸ்ரீகிருஷ்ணனாய் வாழ்ந்தேன் பிறகு என் TOV ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாய் மாற்றியது இப்போது TOV உச்சத்தில் நின்று என்னை ஆஞ்சனேயனாய் மாற்றி விட்டது மன உளைச்சலில் பைத்தியம் பிடிக்கிறது பெருமாளே, என்னைச் சடுதியில் மீண்டும் ஸ்ரீகிருஷ்ணனாய் மாற்று!