கேடு தரும் டாஸ்மாக் உணவகங்கள்

இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி பல முறை எழுதியிருந்தாலும் என்னோடு உடன் வரும் நண்பர்கள் மறந்து விடுவதால் மீண்டும் எழுதுகிறேன்.  உனக்கு எங்கே போயிற்று புத்தி என்று நீங்கள் என்னைக் கேட்டால், எனக்கு இந்த விஷயத்தில் புத்தி இல்லை என்ற பதில்தான் வரும்.  இவ்விஷயத்தில் நான் அதிகவனமாகவே இருந்தாலும் ஓரிரு முறை மறந்து விடுகிறேன்.  மறந்தால் என் வாழ்வில் பதினைந்து நாள் காலி. இறையருள் பாதி, பாதி என்னுடைய அதி தீவிர உடல் பராமரிப்பு மற்றும் … Read more

25 புதிய புத்தகங்கள்

உயிர்மை மூலமாக என் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஆண்டு தோறும் ஆறு அல்லது ஏழு புதிய புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. கடைசியில் பத்து பத்து புத்தகங்கள் வந்தன. ஆண்டு தோறும். இதன் ரகசியம் என்னவென்றால், நான் இணையத்தில் எழுதுவதையெல்லாம் சப்ஜெக்ட் வாரியாகத் தொகுத்து, பிழை திருத்தம் செய்து புத்தகமாக வெளியிடுவார் மனுஷ்ய புத்திரன். உயிர்மையிலிருந்து வெளியே வந்த பிறகு அந்தக் காரியம் நின்று விட்டது. பின்னர், நண்பர் ஸ்ரீராம் ஆண்டு தோறும் புத்தகங்களை சப்ஜெக்ட் வாரியாகத் … Read more

புத்தக விழா குறிப்புகள் – 11

புத்தக விழா இன்று இறுதி நாள்.  இந்தப் புத்தக விழா எனக்கு மிகவும் இனிமையாகக் கழிந்தது. பல நூறு புத்தகங்களில் கையெழுத்திட்டேன்.  இன்னமும் ஸீரோ டிகிரி நாவலை ஏதோ நேற்றுதான் வெளிவந்தது போல் வாங்கிக்கொண்டிருந்தார்கள்.   ஆனால் என் மிக முக்கியமான படைப்பான அந்த்தோனின் ஆர்த்தோ நாடகத்தை ஒருவரும் வாங்கி நான் பார்க்கவில்லை.  இலக்கியத்துக்குப் புறம்பான ஏதோ ஒரு புத்தகத்தை கிட்டத்தட்ட எல்லோருமே வாங்கிக் கொண்டு போனதை பார்த்தேன்.  இதுவரை வாழ்க்கையில் அப்படி ஒரு காட்சியைக் கண்டதில்லை.  ஒரு … Read more

புத்தக விழா குறிப்புகள் – 10

என் ஞாபக மறதி வினோதமாகப் போய்க்கொண்டிருக்கிறது.  அந்த நண்பர் எனக்கு வணக்கம் சொன்னார். புத்தக விழா வளாகத்துக்கு வெளியே காஃபி கடை.  சமீபத்தில்தானே இவரைச் சந்தித்தோம்?  மிகவும் நெருக்கமானவர் ஆயிற்றே?  வழக்கம் போல் பெயர் மறந்து விட்டது.  கூச்சப்படாமல் பெயர் கேட்டேன்.  சரோ லாமா.  அடச்சே, இரண்டு தினங்களுக்கு முன்னால்தான் இதே உரையாடல் நடந்திருந்தது.  அவர் கொடுத்த எலந்தப்பழமும் அப்போதுதான் ஞாபகம் வந்தது.  இனிமேல் அடுத்த புத்தக விழாவில் பார்த்தால் மறக்காது என்று நம்புகிறேன். அவரைத் தொடர்ந்து … Read more

புத்தக விழா – 9 (இலவச சேவை)

தினந்தோறும் புத்தக விழாவில் ஏதாவது சுவாரசியமான சம்பவங்கள்  என்னிடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நேற்று அப்படி ஒன்று. ஒரு மத்திய வயதுக்காரர்.  லக்ஷ்மி சரவணகுமாரின் ஏழெட்டு புத்தகங்களை என்னிடம் கொடுத்து என் கையெழுத்தைக் கேட்டார். கேட்கும்போதே, “உங்களுடைய புத்தகங்கள் என்னிடம் ஏற்கனவே இருக்கின்றன” என்றார். அது பொய் என்பது அவர் சொன்னவுடனேயே புரிந்து விட்டது.  அது எப்படி என்னுடைய புத்தகங்கள் அனைத்தும் அவரிடம் இருக்க முடியும்?  எண்பது புத்தகங்கள் இருக்கின்றன.  அதிலும், சுக்கு இஞ்சி கடுக்காய் என்ற நூல் … Read more