மிருகங்களை நேசிக்கும் நீங்கள் மனித மிருகங்கள் என்று எதிர்மறையான அர்த்தத்தில் சொல்லலாமா?
சுபாஷிணி, சென்னை
பதில்: சொல்லக் கூடாதுதான். ஆனால் அந்த நான்கு கிரிமினல்களையும் வேறு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மிருகங்கள் வன்முறையில் ஈடுபடுவதில்லை. பசிக்காக மட்டுமே அவை மற்ற மிருகங்களை வேட்டையாடித் தின்கின்றன. மற்றபடி மனித இனத்திடம் உள்ள எதிர்மறையான விஷயங்கள் எதுவும் மிருகங்களிடம் இல்லை. எனவே என் வார்த்தைகளில் அதிக கவனம் கொடுக்காமல் அதன் உள்ளே ஊடாடி இருக்கும் அர்த்தத்தை மட்டும் பெற்றுக் கொள்ளவும்.