எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என்னுடைய முதல் நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு கலா கௌமுதி என்ற பத்திரிகையில் தொடராக வந்து கொண்டிருக்கிறது. கலா கௌமுதி மலையாளத்தின் புகழ்பெற்ற இலக்கியப் பத்திரிகை. இது ஒரு வாரப் பத்திரிகை என்பதும் நம் கவனத்துக்குரிய விஷயம். மேலும், இதன் ஸர்க்குலேஷன் ஒரு லட்சம் என்பதிலிருந்து மலையாளிகளின் இலக்கிய வாசிப்பு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
கலா கௌமுதியில் நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ராஸ லீலா நாவலே கலா கௌமுதியில்தான் இரண்டு ஆண்டுகள் தொடராக வந்தது. மலையாளத்தில் இரண்டு ஆண்டுகள் தொடராக வந்த பிறகுதான் அந்த நாவல் தமிழ்நாட்டில் புத்தக வடிவம் பெற்றது. இதெல்லாம் தமிழர்கள் நினைத்துப் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இல்லையா? தமிழில் எழுதப் படும் ஒரு நாவல் தமிழில் வெளிவரும் சாத்தியமே இல்லாமல் அதை மலையாளத்தில் மொழிபெயர்த்து ஒரு பத்திரிகை இரண்டு ஆண்டுகள் தொடராக வெளியிடுகிறது. அந்த நாவல் எழுதப்பட்ட மொழியான தமிழ் புழக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக வெளிவந்து சில நூறு பேரால் படிக்கப்பட்டது நமக்கெல்லாம் பெருமைக்குரிய விஷயம்தானே?
ராஸ லீலா தவிர கலா கௌமுதியில்தான் என்னுடைய ஆறு சினிமா புத்தகங்களையும் ஆஸாதி ஆஸாதி போன்ற கட்டுரைகளையும் தொடராக எழுதி வந்தேன். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இடைவெளியே இல்லாமல் கலா கௌமுதியில் என் எழுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அதற்காக அந்தப் பத்திரிகைக்கு நான் ந
இப்போது கலா கௌமுதியில் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என் நண்பர் ஜெயேஷ்-இன் மொழிபெயர்ப்பில் வந்து கொண்டிருக்கிறது. மொழி சிறப்பாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள்.
அடுத்து, ஜெயேஷின் மொழிபெயர்ப்பில் எக்ஸைலும் நாவல் இன்னொரு பிரபலமான மலையாளப் பதிப்பகத்தின் மூலம் வெளிவருகிறது. ஆறே மாதத்தில் மொழிபெயர்ப்பை முடித்து விட்டார் ஜெயேஷ்.
தமிழில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட என்னுடைய நாவல் இப்போது மலையாளப் பத்திரிகையில் தொடராக வருவது எனக்குள் ஒரு மயக்கத்தை ஏற்படுத்துகிறது.முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதால் இதன் பொருட்டு ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யலாமா என்று யோசிக்கிறேன்.
Comments are closed.