என் எழுத்தைப் பாருங்கள்…

என் நெருங்கிய நண்பர் ஒருவர் இன்பாக்ஸில் வந்து ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார்.

அவர் சொன்னது சரிதான். ஆனால் எழுத்தாளர்கள் உளறக் கூடாதா? என் நாலு வரி அபிப்பிராயங்களைப் படிப்பதை விட நான் பத்து நாளில் எழுதிய அன்பு நாவலைப் படியுங்கள். கடவுளே எழுத்தாளனாகப் பிறந்தாலும் அப்படி ஒரு நாவலை எழுதியிருக்க முடியாது. என்னுடைய ஆகச் சிறந்த படைப்பு அது. ராஸ லீலா, ஸீரோ டிகிரி, எக்ஸைல் எல்லாவற்றையும் விட அன்புதான் உச்சம். இனிமேல் எழுதப் போகும் நாவல்கள் கூட அன்புவை நெருங்க முடியாது.

அன்பு நாவலைப் படியுங்கள். மற்றபடி என் உளறல்களையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள். இன்று அன்பு நாவலை பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டு அதன் பிறகு ஒரு அத்தியாயத்தை எழுதிச் சேர்த்தேன், கடைசியில். அதை லே அவ்ட் பண்ணும் ஆர்ட்டிஸ்ட் விஜயன் அந்த அத்தியாயத்தைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்து விட்டார்.