பச்சை மிளகாயை முன்வைத்து ஒரு erotic கவிதை : நிர்குண்

(நிர்குண் ஒரு நாளில் இதுபோல் முப்பதிலிருந்து நாற்பது கவிதைகள் எழுதுகிறார். எல்லாவற்றையும் தொகுத்தால் ஒரு ஆண்டில் இருபது முப்பது தொகுதிகள் வரும். நிர்குண், விரைவில் இதையெல்லாம் தொகுப்பாகக் கொண்டு வாருங்கள் – சாரு)

July 28, 2025 Charu Nivedita

1

எல்லாம் ஒரு திட்டத்தில் நடக்கிறது

என்கிறான் பெருங்கவிஞன்

’ஒரு பறவை வீழ்ந்தாலும்

அதில் திட்டமுண்டு

இப்போது நடக்கும் என்றால் நடக்காது

இப்போது நடக்காது என்றால் நடக்கும்

2

அப்படித்தான்

நடந்தது அந்தச் சந்திப்பு

ஈருடல் ஓருயிர் ஆனது

ரோமியோவுக்கு முன்பே ஒரு காதலி இருந்தாள்

ஜூலியட்டைக் கண்டதும் காணாமல் போனது

பழைய காதல்

இதுவும் அப்படியே நடந்தது

3

ஒவ்வொருவருக்கும்

ஒரு பழக்கம்

எனக்குப் பச்சை மிளகாய்

ஒன்றுக்கு இரண்டு

கடித்து உண்டால்தான்

உணவு இறங்கும்

4

அவளைக் கண்டதும்

பச்சை மிளகாயைத் துறந்தேன்

காரணமா?

உடையவர் சொன்னார்

’பிறர் வலியைத்

தன் வலியாய் உணர்பவனே

வைணவன்’ – சாருநிவேதிதா.

“பச்சை வடிவத்தை முன்வைத்து –

ஸௌந்தர்ய ரஸ்புடின் நிர்குண்.

கருமை மேசையின் விளிம்பில் 

ஒரு நீளமான பச்சை நிழல் 

தன் கூர்மையை மறைக்காமல் 

என் மூச்சைத் தொடுகிறது— 

அர்த்தமில்லா ஒரு வெப்பம் 

உள்ளே எரிகிறது.

அது ஒரு வடிவம்தான் 

ஆனால் என் விரல்கள் 

அதன் மேற்பரப்பைத் தொட்டவுடன் 

உடல் முழுவதும் 

ஒரு மெல்லிய மின்னல் 

திசை தெரியாமல் ஓடுகிறது.

கடிப்பதற்கான பழக்கம் 

இங்கே பொருளிழக்கிறது— 

கடிக்காமல் 

உள்ளே இறங்கும் தீப்பொறி 

எந்த மொழியிலும் 

பதியாத ஒரு துடிப்பு.

அவள் நிழல் 

அந்த பச்சை வடிவத்தின் அருகே நின்றதும் 

எல்லா பழக்கங்களும் 

திடீரென கரைகின்றன— 

உடல் தன் எல்லைகளை மறந்து 

ஒரு வெற்றிடத்தை 

மெல்லத் திறக்கிறது.

அந்த வெற்றிடத்தில் 

அவளின் மூச்சு 

அந்த பச்சை வடிவத்தின் கூர்மை 

என் உள்ளே எழும் 

அர்த்தமற்ற துடிப்பு— 

மூன்றும் சேர்ந்து 

ஒரு பெயரில்லா 

ஒரு வடிவமில்லா 

ஒரு வெப்பத்தை உருவாக்குகின்றன.

நிர்ஹோஸ்தியஸ். 080708-NNPTA-F

நவீன காலத்து ரஸ்புடின் என்று என்னால் அழைக்கப்படும் நிர்குண்