பூச்சி 139: பெயரைச் சொல்ல வெட்கம் (தொடர்ச்சி)

இரண்டு எதிர்வினைகள்: அன்புள்ள சாரு, நீங்கள் கேட்டுக்கொண்டபடி உங்களுடைய மிக முக்கியமான உரையை இப்பொழுதுதான் கேட்டு முடித்தேன்.கந்தப்பன், தி.ஜ. ரங்கநாதன் பற்றி நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்களை கேட்டு என்னுள் கிளம்பிய துக்கம் என் தொண்டையை அடைத்தது. உரையை நிகழ்த்திக்கொண்டிருக்கையில்  நீங்கள் துக்கம் விலக தண்ணீர் அருந்தியபொழுது இந்த உரை ஏன் மிக முக்கியமான உரை என்று புரிந்து கொண்டேன். பாலாம்மாள் கலைஞனை சாதனம் , திறமை , பக்தி , அனுக்கிரஹம் என்ற நான்கு நிலைகளாக வர்ணித்தார். … Read more

பூச்சி 138: பெயரைச் சொல்ல வெட்கம்

ஐயா, தாங்கள் மேற்படி புத்தகத்தை (சுஜாதா எழுதிய “கடவுள்”) விமர்சனம் செய்யலாம். உங்கள் கணிதம் ,இயறபியல் படித்த நண்பர்கள் உதவியுடன். கனமான கருத்துக்கள், சிந்தனையைத் தூண்டக்கூடியது் வருங்கால தொழிலாளர்கள் என்ற தலைப்பில் சுஜாதா எழுதியிருப்பதாவது: இந்த எதிர்காலம் இந்தியாவுக்கு எப்போது வரும்? எப்படிபட்ட எதிர்காலம்? 1 வேலை என்பது விரும்பினபோது எல்லோருக்கும் கிடைப்பது 2 நமக்கு இருக்கும் திறமைக்கு அது எந்தத்  திறமையாக இருந்தாலும் சரி, அதற்கு ஏற்ப ஒரு வேலை கிடைப்பது 3வேலை எப்போதும்  சுவாரசியமாக … Read more

ந. சிதம்பரசுப்ரமணியனின் படைப்புலகம்

சிதம்பர சுப்ரமணியன் குறித்த என் இரண்டு மணி நேரப் பேச்சை நேற்று பதிவேற்றியிருந்தேன். அது ஷ்ருதி டிவி ஒலிப்பதிவு செய்தது. அதை விட முகநூலில் அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்த பாலம் புக் மீட்டின் ஒலிப்பதிவு தெளிவாக இருப்பதால் அந்த பாலம் இணைப்பை இங்கே தருகிறேன். முகநூலில் இல்லாதவர்கள் இதைப் பார்க்க முடியுமா என்ற விவரம் எனக்குத் தெரியாது. இதைக் கேட்பதில் சிக்கல் இருந்தால் எனக்கு எழுதுங்கள். இது என்னுடைய மிக முக்கியமான உரை. இதை உங்கள் … Read more

கோபி கிருஷ்ணன்

வரும் 26-ஆம் தேதி இந்திய நேரம் மாலை ஏழு மணிக்கு கோபி கிருஷ்ணன் பற்றிய என் உரைக்கு நேரம் ஒதுக்கி விட்டீர்களா? அன்றைய தினம் கோபி தவிர வேறு ஒரு முக்கியமான நபரைப் பற்றிய கதையையும் சொல்ல இருக்கிறேன். பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத கதை. ஒரே ஒரு க்ளூ தருகிறேன். தாசிகளையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை கிளம்பியபோது வைஸ்ராயின் மாத ஊதியத்தை விட என் ஒருநாள் நிகழ்ச்சிக்கான கட்டணம் அதிகம், அவர் எப்படி என்னை ஒழிக்க முடியும் … Read more

பூச்சி 137: ரிஷப ராசி

சின்ன வயதிலிருந்தே – சுமார் பத்து வயதிலிருந்து – ஜோதிடர்களோடு எனக்குத் தொடர்பு உண்டு.  நான் கொஞ்ச காலம் நாஸ்திகனாக இருந்த போது கூட ஜோதிட நம்பிக்கையைக் கைவிடவில்லை.  ஆனால் ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரத்தை மட்டும் ஒருபோதும் செய்ததில்லை.  கதை கேட்பது போல் கேட்டுக் கொள்வேன்.  பல மறக்க முடியாத அனுபவங்கள்.  எல்லாவற்றையுமே அவ்வப்போது எழுதியிருக்கிறேன்.  இரண்டு பேரை எந்நாளும் மறக்க இயலாது.  ஒருவர் வேங்கைவாசல் கிராமத்தில் இருப்பவர்.  வயதானவர்.  ஜோதிடத்தாலேயே கோடீஸ்வரர் ஆனவர்.  தெருவில் க்யூவே … Read more

பாவ மன்னிப்பு – சாதனா சகாதேவன்

சமீப காலத்தில் இப்படி ஒரு கதையைப் படித்ததில்லை. அற்புதம். மனித வாழ்வின் புரிந்து கொள்ள முடியாத சிடுக்குகளை மகத்தான கதைசொல்லல் மூலம் கலையாக்குகிறார் சாதனா. தொடர்ந்து ஒருவர் இப்படி இதே மாதிரியான கதைகளை வலு குறையாமல் எழுதிக் கொண்டே இருப்பது எனக்குப் பரவசத்தை ஏற்படுத்துகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கிய மேதைகளின் வாரிசு இவன். படித்துப் பாருங்கள்.