புத்தகம் அனுப்புபவர்கள் ஏன் இப்படி டார்ச்சர் செய்கிறார்கள்? (2)

இந்த விவகாரத்தை இத்தோடு விட மனமில்லாமல் என் நண்பர் ஒருவரிடம் பேசினேன்.  அவர் bubble wrap பேப்பர் போட்டுப் பார்சல் கட்டினால் இந்தப் பிரச்சினை இல்லை என்றார்.  ஆனால் டபிள் ராப் பேப்பர் சாதா பேப்பர் கட்டை விடப் பல மடங்கு செலவு அதிகம்.  சரி.  ஏற்கனவே பதிப்பகங்கள் லாபம் இல்லாமல் நடக்கின்றன.  புத்தகம் வாங்குபவர்களால் அவர்களுக்கு அநாவசிய செலவு வேண்டாம்.  இப்போது என்னுடைய விண்ணப்பம் என்னவென்றால், சாதா பேப்பரிலேயே கட்டுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.  கத்தரிக்கோலால் வெட்டி எடுக்கக் கொஞ்சம் இடம் வையுங்கள். அவ்வளவுதான்.  க்ரியா, எதிர் போன்ற பல பதிப்பகங்கள் இப்படித்தான் புத்தகங்களின் பார்சல்களை வெட்டிப் பிரிக்கவே முடியாதபடி அனுப்புகின்றன.  தயவுசெய்து என்னைத் திட்டித் தீர்க்க பேனாவை எடுக்காமல் ஒரு கன்ஸ்யூமரின் பிரச்சினையை கவனியுங்கள்.  யாரும் உங்களிடம் சொல்ல மாட்டார்கள்.  நான்தான் எல்லாவற்றுக்கும் மணி கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறேன்.  ஒரு அற்புதமான தயாரிப்பில் வந்துள்ள புத்தகம் ஒரு படு மட்டமான பார்சலால் சீர் குலைந்து விட்டதே என்ற வயிற்றெரிச்சலில் இதை எழுதியிருக்கிறேன்.  புரிந்து கொள்ளுங்கள்.