இரண்டு புத்தகங்கள்: ஆங்கிலத்தில்

My Life, My Text என்ற என் சுயசரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதோடு கூடவே இன்னொரு நேர்காணலும் உருவாகி வருகிறது. நேர்காணலை நடத்திக்கொண்டிருப்பவர் அசோக் கோபால். அம்பேத்கர் பற்றிய ஆய்வு நூலை எழுதியவர். அந்த நேர்காணலையும் ஆங்கிலத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். முதல் நூலுக்காக உலகத்தில் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான, எனக்குப் பிடித்தமான சுயசரித்திரங்களைப் படித்து வருகிறேன். குறிப்பாக, பெர்க்மனின் The Magic Lantern, ஆந்த்ரே டர்காவ்ஸ்கியின் The Sculpting in Time, சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி பற்றி அவரது காதலி லிண்டா கிங் எழுதிய Loving and Hating Chlarles Bukowski, கார்ஸியா மார்க்கேஸ் எழுதிய Living to Tell the Tale. இந்தப் பட்டியலில் நான் வாசிக்க விரும்பும் ஒரு முக்கியமான புத்தகம் கிடைக்கவில்லை. யாராவது வாங்கி அனுப்பினால் பெரும் உதவியாக இருக்கும். Alain Robbe-Grillet எழுதிய Ghosts in the Mirror. எந்த இணைய நூலகத்திலும் கிடைக்கவில்லை. அனுப்ப விரும்புபவர்கள் எனக்கு எழுதவும்.

charu.nivedita.india@gmail.com

அசோக் கோபாலுடனான உரையாடல் பாரிஸ் ரெவ்யூ பாணியில் இருக்கும். ஆனால் நேரடி உரையாடல் அல்ல. எழுத்து பூர்வமாக நடக்கிறது. இன்னொரு வித்தியாசம், பாரிஸ் ரெவ்யூவில் வருவது போல் சுருக்கமாக இருக்காது. சுமார் இருநூறு பக்க நூலாக இருக்கும். முதல் இரண்டு கேள்விகளுக்கு பதில் அனுப்பினேன். பத்து இருபது பக்கங்கள் இருகும். அதற்கு அவர் “One lifetime is not going to be enough for the stories you have to tell!. You will come back as a ghost” என்றும் “With reference to answers, one thing that struck me immediately is what I noted earlier as well, namely postmodernist or post whatever, this man is a born raconteur, he loves to tell stories (true or coloured we will never know) and, so ghoom firke, he remains strongly attached to the “narrative tradition” (unlike say, Shri Godard, who was pretty lousy at telling stories). Soche ne wali baat” என்றும் எழுதினார். உற்சாகமாக இருந்தது.

இந்த உரையாடலுக்காக நான் பாரிஸ் ரெவ்யூவில் வந்த எனக்குப் பிடித்தமான நேர்காணல்கள் அனைத்தையும் படித்தேன். பெயர்ப் பட்டியலைத் தருகிறேன்.

ஜெர்ஸி கோஸின்ஸ்கி, பாப்லோ நெரூதா, William Gass (இவரைப் பற்றி ஆரம்ப காலத்தில் அதிகம் எழுதியிருக்கிறேன், அமெரிக்காவில் இவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று கருதப்பட்டவர், சொற்களை ஒரு சிற்பியைப் போல் செதுக்கியவர், தத்துவப் பேராசிரியராக இருந்தவர், இவர் வாங்காத விருது இல்லை. இவரைப் பற்றி இவர் காலத்தில் சாலையோரத்தில் வாழ்ந்த சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி என்ன நினைத்தார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. ஏனென்றால், வில்லியம் காஸ் பல்கலைக்கழகங்களிலேயே வசித்தவர்), எஸ்ரா பௌண்ட், டி.எஸ். எலியட், ஹெமிங்வே, ஹென்றி மில்லர், நார்மன் மெய்லர், ஆலன் கின்ஸ்பெர்க், லூயி ஃபெர்தினாந் செலின்… இன்னும் இந்தப் பட்டியல் நீள்கிறது.

இத்தனை விரிவாக ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு பேட்டி என்றதும் நான் இத்தனையையும் படித்து விட்டுத்தான் வருகிறேன். இப்படித்தான் செய்தார்கள் நம் முன்னோடிகள். இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் நாங்கள் மூவரும். எங்களுக்குப் பிறகு இப்படிச் செய்ய ஒருத்தர் கூட இல்லை என்பதை வருத்தத்தோடு இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.