அராத்து எழுதிய புருஷன் நாவலின் ஒலி வடிவக் குறுந்தகடு என்னால் இப்போது வெளியிடப்படுகிறது. நாவலை அராத்து வாசித்திருக்கிறார். அறுநூறு பக்க நாவல். குறுந்தகடு என்.எஃப்.டி. மூலம் விற்கப்படுகிறது. முதல் பிரதியின் விலை முப்பது எத்தெரியம். ஒரு எத்தெரியத்தின் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய்க்கும் மேல். ஆக, முதல் பிரதியின் விலை ஒரு கோடி ரூபாய். மற்ற பிரதிகளின் விலை ஒரு லட்சம் ரூபாய்.
நான் எந்த விழாவாக இருந்தாலும் அதில் கலந்து கொள்ள ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வாங்குகிறேன். அராத்து நான் கேட்காமலேயே கொடுத்து விட்டார். காரணம், அவர்தான் அந்த யோசனையைச் சொன்னதே.
வரும் சனிக்கிழமை கோவாவில் புருஷன் நாவலின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இப்போது ஒலிவடிவக் குறுந்தகடு. மீண்டும் விலை விவரம். முதல் பிரதி ஒரு கோடி ரூபாய். மற்ற பிரதிகளின் விலை தலா ஒரு லட்சம் ரூபாய்.
வாங்குவதற்கான லிங்க் கீழே:
https://opensea.io/assets/ethereum/0x7c1ed913c797b7c126290e4fe20f33431bed0757/1