ஒரு பிழையும் விளக்கமும்

ஐயா, இன்று தாங்கள் எழுதியுள்ள தினமலர் பகுதியில் இசை நுணுக்க விளக்கம்- M D ராமநாதன் என்று எழுதியுள்ளீர். அப்புததகத்தை எழுதியது இசை மேதை சங்கீத கலாநிதி Dr S ராமநாதன் ஆவார் என்பதை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன். His disciple and grand daughter Sucharithra Raghunathan
sorry madam.Dr. எஸ்.  ராமநாதன் அவர்களைத்தான் எம்.டி. ராமநாதன் என்று  சொல்லி விட்டேன். தொலைபேசி நேர்காணல்களில் இது போன்ற தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.  வாஸ்தவத்தில் சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் என்ற அந்த மகத்தான நூலைப் பற்றி 1980-ஆம் ஆண்டு ஒரு நீண்ட மதிப்புரையும் எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும். இது பற்றிய விளக்கத்தை சாரு ஆன்லைனில் வெளியிடுகிறேன்.
சாரு
வாசக நண்பர்களுக்கு:  பின்வருவது எம்.டி. ராமநாதன்.
எனக்கு மிகப் பிடித்த சங்கீதக் கலைஞர்களில் முதல் வரிசையில் இருப்பவர் டாக்டர் எஸ். ராமநாதன்.  மாபெரும் இசை மேதை.  எனக்கு நேரம் கிடைக்கும் போது அவரது சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் என்ற நூலுக்கு நான் எழுதிய மதிப்புரையை இங்கே தருகிறேன்.  இப்போது டாக்டர் எஸ். ராமநாதனின் அற்புதமான இசை நிகழ்வுகளில் ஒன்று:

 

https://www.youtube.com/watch?v=SdlIWWfmysQ