மாற்று சினிமாவின் முகவரி

மாற்று சினிமாவிற்கான சந்தை வாய்ப்பு…
Pure cinema –  தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு…
நண்பர்களே pure cinema என்கிற பெயரில் தமிழ் ஸ்டுடியோ புதிய புத்தகக் கடை ஒன்றை தொடங்கவுள்ளது. எதிவரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் சென்னை வடபழனியில் உள்ள தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் இந்த புத்தகக் கடை செயல்பட உள்ளது. முழுக்க முழுக்க சினிமா தொடர்பான புத்தகங்கள், டி.வி.டி. (ஆவணப்படங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள்) என சினிமாவிற்கான உங்கள் தேடல் முழுவதும் நிறைவடையும் இடமாக இந்த புத்தகக் கடை செயல்படவிருக்கிறது. குறும்படங்கள், ஆவணப்படங்கள் எடுத்த நண்பர்கள் உங்கள் படங்களை இந்த புத்தகக் கடையில் விற்பனைக்கு வைக்கலாம். குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கு இதுவரை சந்தை மதிப்பு இல்லாமல் இருந்தது. இனி அந்த குறை இருக்காது. உங்கள் படங்களை விற்பனை செய்ய தமிழ் ஸ்டுடியோவின் pure cinema புத்தகக் கடையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் படங்களை விற்பனை செய்ய கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வையுங்கள். (குறைந்தது பத்துப் பிரதிகள் நல்ல டி.வி.டி. பாக்ஸில் வைத்து அனுப்பவும்)
pure cinema
எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600026
கமலா திரையரங்கம் அருகில்,
இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழ்க்கண்ட எண்ணிற்கு அழையுங்கள்.
9840698236
வாருங்கள், மாற்று சினிமாவிற்கான ஒரு புதிய சந்தையை உருவாக்குவோம்.