பிக் பாஸ் பதிவுகள்

முகநூலில் பிக் பாஸ் பற்றிய என் பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இன்று அராத்து பற்றி எழுதியதும் அதற்கு அராத்து பதிலும்:

சாருநிவேதிதா :-

அராத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிச்சயம் அழைக்கப்படுவார். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் அவர் ஒரே வாரத்தில் நாமிநேட் செய்யப்படுவார். மக்களும் ஓட்டுப் போட மாட்டார்கள். ஏனென்றால், அவருக்கு நடிக்கத் தெரியாது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு entertainment show. சினிமாவில் வசனத்தைக் கொடுத்து நடிக்க வைப்பார்கள். பிக் பாஸில் வசனம் நீங்கள் தான். நடிப்பு எல்லாமே. உதாரணமாக, பி. வாசு மகனைத் திருடனாக நடிக்கச் சொன்னார்கள். (இத்தனை நாள் பார்த்தும் அவர் பெயர் மறந்து போனேன்) அவரோ கதறி அழ ஆரம்பித்து விட்டார். எனவே அராத்துவால் நடிக்க முடியுமா முடியாதா என்பது மட்டுமே பிரச்சினை. இது போன்ற நிகழ்ச்சிகளில் 50 நாள் தாக்குப் பிடித்தாலே அது இமாலய சாதனை. அராத்துவால் ரெண்டு நாள் தான் தாக்குப் பிடிக்க முடியும். ஏனென்றால், காலையில் அவர் பத்து மணிக்குத்தான் எழுந்து கொள்வார். Sorry for sharing this personal matter. Araathu, pl dont mind. அங்கேயோ எட்டுக்கே எழுந்து கொள்ள வேண்டும். மேலும், சராசரி மனிதனாக இருந்தால்தான் மக்களுக்குப் பிடிக்கும். அராத்துவோ மக்களுக்குப் பிடிக்காத சில புத்திஜீவி குணங்கள் கொண்டவர். அங்கே பாருங்கள், வையாபுரியை யாராவது பிடிக்காமல் நாமினேட் செய்கிறார்களா, அவர் வெளியே போக வேண்டும் என்று அடம் பிடிப்பதால் நாமினேட் செய்கிறார்கள். எனவே அராத்துவுக்கு அங்கே இருக்கும் குணநலன்கள் இல்லை என்பது என் முடிவு. அவர் முடிவு வேறாக இருக்கலாம். அதை நான் மதிக்கிறேன்.

நம்பிள் பதில் :-

சாரு ,

நீங்கள் சொன்னது சரிதான். 2 நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது. மெண்டல் ஆகி விடுவேன்.

1) 10 அல்ல சாரு 11 மணிக்குத்தான் எழுந்திருப்பேன். எழுந்திருப்பேன் என்பது சும்மா உலகம் இருக்கா அழிஞ்சி போச்சா என்று விழித்துப் பார்ப்பது. 12 மணிக்குத்தான் படுக்கையை விட்டு நகர்வேன்.

2) எழுந்திருப்பது கூட சிரமப்பட்டு மாற்றிக்கொள்ளலாம். என்னால் இரவு 2 மணிக்கு முன் தூங்க முடியாது.

3) வாரம் ஒருமுறையேனும் பியர் அல்லது வைன் கொடுப்பார்களா ?

4) காயத்திரி , ஷக்தி ,சிநேகனை எல்லாம் போடாங் முட்டாக்கூதிங்களா என திட்டி விடுவேன். கேமராவில் பதிவானதா இல்லையா என்ற சந்தேகத்தில் கேமரா முன் வந்து மீண்டும் அதை சொல்வேன்.

5) அபத்தமான ரூல்ஸை ஏண்டா ராணுவ ஒழுங்கோடு ஃபாலோ செய்கிறீர்கள் என்று கேட்டு , எந்த ரூலையும் மதிக்க மாட்டேன்.

6) நீச்சல் குளம் வேறு சின்னதாக உள்ளது. புணர மட்டுமே லாயக்கு. புணர்ச்சிக்கு ஏற்ற நீச்சல் குளம் இருந்தாலும் , ஏற்ற பெண்கள் இல்லை !

7)நான் சினிமாக்காரர்களிடம் பேசும் பேச்சைக் கேட்டு ஒன்று எடிட் செய்து விடுவார்கள் அல்லது , சினிமாக்காரகள் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த போராடுவார்கள்.

8) அடி முட்டாள் , மர மண்டைகள் உடன் பழகிய பழக்கம் இருக்கிறது , ஆனால் தனித்தனியாகத்தான். ஒரே நேரத்தில் இத்தனை பேரிடம் பழகி பழக்கம் இல்லை.

9)பரணி போல தடுமாற மாட்டேன். இரவு 3 மணிக்கு பக்காவாக சுவரேறிக் குதித்து வந்து விடுவேன்.

10)மற்ற எல்லோரும் என்னை நாமினேட் பண்ணி சரித்திரம் படைப்பார்கள். ஆனால் மக்கள் , இவன் ஏதோ விசித்திரமாக செய்கிறானே , ஒரு வாரம் விட்டுப்பார்க்கலாம் என்று ஓட்டு போடுவார்கள்.