Marginal Man

nilavu-theyaatha-desam_FrontImage_981தமிழில் எக்ஸைல் என்றுதான் தலைப்பு.  ஆனால் தஸ்லீமா நஸ்ரின் அவருடைய புதிய நாவலுக்கு எக்ஸைல் என்று பெயர் வைத்து விட்டதால் என் நாவலுக்கு வேறு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் விவேக் Marginal Man என்ற பெயரைச் சூட்டினார்.  விவேக்கை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  பிரபலமான ஆங்கிலப் பத்திரிகையாளர்.  டி.ஆர். விவேக்.  பிறகு தலைப்பை கொஞ்சம் நியூமராலஜி பிரகாரம் The Marginal Man என்று வைத்தேன்.  (நியூமராலஜியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.  ஒவ்வொரு நேரத்துக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும்.  சில சமயங்களில் நம்பிக்கை வரும்.  வேறு சில நேரங்களில் நியூமராலஜியை நம்புகிறவனெலாம் சுத்த மடையன் என்று தோன்றும்.)  பிறகு நாவலைப் படித்த Irwin Allan Sealy தெ மார்ஜினல் மேன் என்பதை விட மார்ஜினல் மேன் என்ற தலைப்புதான் நாவலுக்கு அதிகப் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னதால் முன்பு விவேக் சொன்னபடி மார்ஜினல் மேன் என்றே வைத்து விட்டேன்.

மார்ஜினல் மேன் 600 ரூ விலை.  700 பக்கம்.  இதை ஒரு மதுரை நண்பர் 50 பிரதிகள் வாங்கியிருக்கிறார்.  30,000 ரூ.  நண்பர்களுக்குக் கொடுக்கப் போகிறாராம்.  மற்றொரு நண்பர் 10 பிரதிகள் மார்ஜினல் மேன் வாங்கியிருக்கிறார்.  அவரும் மதுரை.  சென்னையில் செல்வகுமார் மார்ஜினல் மேன் 30 பிரதிகள் வாங்கியிருக்கிறார்.  செல்வகுமார் நம் வாசகர் வட்டம்.  திருப்பூர் செந்தில் பத்து பிரதிகள் மார்ஜினல் மேன் வாங்கியிருக்கிறார்.  டாக்டர் ஸ்ரீராம் மார்ஜினல் மேன் 15 பிரதிகள் வாங்கியிருக்கிறார்.  மற்ற நண்பர்களும் இப்படி வாங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  நீங்கள் வாங்கும் போதே மற்ற நண்பர்களுக்கும் சேர்த்து வாங்க முயற்சி செய்யுங்கள்.

***

என்னை யாரும் திட்டினால் அது பற்றி நான் கவலைப்படுவதே இல்லை.  பரிதாபம் தான் வரும்.  அப்படிஎன்னைக்  கடுமையாகக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டி, அதே சமயம் நிலவு தேயாத தேசத்தின் பின்புறம் உள்ள blurb இல் உள்ள ஒரு முக்கியமான பிழையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.  அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

“ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.”

என்ன பிழை என்று நீங்களே சொல்லிவிடலாம்.  அடுத்த பதிப்பில் இந்தப் பிழை இருக்காது!IMG_0430