நிலவு தேயாத தேசம்

“ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.”

நிலவு தேயாத தேசம் நூலிலிருந்து…

துருக்கி பயணக் கட்டுரையான நிலவு தேயாத தேசம் இன்று மாலை ஐந்து மணியிலிருந்து சென்னை புத்தக விழாவில் கிழக்கு பதிப்பக அரங்கத்தில் கிடைக்கும்.  இது சமீபத்தில்வெளிவந்துள்ள புதிய நூல்.  nilavu-theyaatha-desam_FrontImage_981