முன்னோடிகள் – 17

கோபி கிருஷ்ணனின் படைப்புகளுக்குள் நான் இன்னும் நுழையவில்லை.  பதினைந்து தேதிக்கு மேல் ஆரம்பிக்க வேண்டும்.  ஆனால் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க ஆரம்பிக்கலாம்.  புத்தகம் நற்றிணையில் கிடைக்கிறது.  ஒரே தொகுப்பு.  மின்னூல் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.  இணையத்தில் கிடைத்தவரை நாலைந்து கதைகளின் லிங்க்கை நேற்று கொடுத்திருந்தேன்.  வளன் அரசு கோபி பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். 

அப்பா,

கோபி கிருஷ்ணனின் கதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஃபூக்கோவின் Madness and Civilization போலத் தமிழ்ச் சூழலில் எழுதப்பட்ட மிக முக்கியமான பதிவுகள் கோபி கிருஷ்ணனின் பல கதைகள். உங்கள் உரையில் மனப்பிறழ்வு ஏன் எப்போதும் ஒதுக்கி வைக்கப்படுகிறது என்பதைப் பற்றிச் சொல்ல முடியுமா? ஏனென்றால் ‘உள்ளேயிருந்து சில குரலகள்’ படித்தபின் மனப்பிறழ்வு என்பதை நம் சமூகம் எப்படி வரையறை செய்கிறது என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறது.
கோபி கிருஷ்ணனின் கதைகள் வழியாக வாழ்வின் மீதான  பிரக்ஞை ஆழமாகிறது. நீங்கள் இவரை இயேசுவைப் போல் வாழ்ந்தவர் என்று சொல்லியிருக்கிறீர்கள். சட்டென இப்போது ஞாபகத்துக்கு வருவது ‘அன்பே சிவம்’ என்ற கதை. கரப்பான் பூச்சியைப் பற்றிய கதை. இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ முடியுமா என்று ஆச்சரியப்படுத்துகிறது. ஆனால் மனோதத்துவம் இப்படி வாழ்பவர்களுக்கு இதெல்லாம் ஒருவிதமான மனநோய் என்று label செய்துவிடுகிறது (அதுவும் கதையில் வருகிறது). ஒருபக்கம் நடைமுறை வாழ்வு இன்னொரு பக்கம் கோபி கிருஷ்ணன் மற்றும் நீங்கள் காட்டும் உன்னத வாழ்வு, இந்த இரண்டுக்கும் நடுவே இருக்கும் தடுமாற்றத்தை எப்படி அணுகுவது?
‘இலியும் வழியும் புறப்பாடும் தெறிப்பும்’ என்ற கதையைப் படிக்கும் போது உங்கள் கதைகள் ஞாபகத்துக்கு வந்தது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தன்னிச்சையாக எழுதிக்கொண்டு செல்வதை Rap பாடல்களுடன் ஒப்பிடலாமா?

வளன்

என் உரையில் மேற்கண்ட கேள்விகளுக்கும் பதில் தருவேன். 

யார் என்று மறந்து விட்டேன்.  அந்த நண்பர் தெரிவிக்கவும்.  ஒரு அருமையான கேள்வி கேட்டார்.  நீங்கள் ஒரு recluse.  மனிதர்களுடன் பேசுவதில்லை.  அப்படி இருந்தால் எப்படி அவர்களின் கதைகளை எழுதுவீர்கள்? 

இந்தக் கேள்வியை மிகவும் ரசித்தேன்.  இதேபோல் முன்பு ஒருமுறை என் நண்பர் டாக்டர் மணிகண்டனும் கேட்டார்.  காவேரி மருத்துவமனையில் இதயப் பிரிவில் இருக்கிறார்.  அவர் கேட்டார், ”நீங்கள் தினசரிகள் படிப்பதில்லை. தொலைக்காட்சியும் பார்ப்பதில்லை. அப்படியானால் அன்றாட செய்திகள் பற்றி எப்படித் தெரிந்து கொள்கிறீர்கள்.  மட்டுமல்ல; அவை பற்றிக் கட்டுரைகளும் எழுதுகிறீர்களே?  சரியான பார்வை கிடைக்குமா?” இதை அவர் நான் தப்லீக் ஜமாத் பற்றி விமர்சனரீதியாக எழுதியபோது கேட்டார் என்பது முக்கியம்.   படிப்பதில்லை, பார்ப்பதில்லை என்றாலும் எனக்கு ஒரு டஜன் கண்களும் காதுகளும் உண்டு.  படிப்பவர்கள் எனக்கு செய்திகளின் இணைப்பை அனுப்பி விடுகிறார்கள்.  அவர்கள் அனைவரும் தீவிர மதச்சார்பின்மையாளர்கள்.  அதாவது, ஜேஎன்யூ புத்திஜீவிகள் மாதிரி.  தீவிர மோடி எதிர்ப்பாளர்கள்.  தீவிர சிறுபான்மை ஆதரவாளர்கள்.  தீவிர பிராமண எதிர்ப்பாளர்கள்.  தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்கள்.  இந்துத்துவ எதிர்ப்பு என்பது இந்து எதிர்ப்பு மாதிரியே எனக்குப் பல சமயங்களில் தோன்றும்.  இவர்கள் அனைவருமே இந்துக்கள் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.  இவர்களில் தருண் தேஜ்பாலும் அடக்கம்.  இந்தச் செய்திகளை நான் உடனுக்குடன் படித்து விடுவேன்.  இதற்கெல்லாம் ஒரு அரை மணி நேரம் ஆகும்.  அவ்வளவுதான்.  இதையும் மீறி இன்று என்ன ஒரே வெடி சத்தமாக இருக்கிறது என்று தீபாவளி நன்னாளிலும் இன்று ஏன் விடுமுறை என்று குடியரசு தினத்திலும் கேட்கும் வழக்கம் மட்டும் போகவில்லை.  அதனால் வலதுசாரிகளின் செய்திகளைப் படித்து விட்டு நான் எழுதுவதில்லை.  இடதுசாரிகளையும் நம்புவதில்லை. 

இப்போது முதல் கேள்விக்கு வருவோம்.  நான் யாரிடமும் பேசுவதில்லை என்றாலும் நண்பர்களின் கதைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.  I am a very good listener.  அது எனக்கே தெரியும்.  மணிக்கணக்கில் கேட்பேன்.  ராகவன் சொன்ன கதைகளை வைத்து ரெண்டு மூணு நாவல்கள் எழுதலாம்.  எனக்கு சோமன் சுந்தரம் என்று ஒரு சங்கீதக் கலைஞர் நீண்ட கால நண்பர்.  அவர் சொல்லும் கதைகளை வைத்தும் ஆயிரம் பக்கம் எழுதலாம். தவிலில் தொப்பி என்று ஒரு பகுதி உள்ளது.  கழியால் தட்டும் பகுதிதான் தொப்பி. தவிலின் வலப்பகுதிக்குப் பெயர் வலந்தலை.  தொப்பிக்கு இளம் கன்றுக்குட்டியின் தோல்தான் பயன்படுத்தப்படுகிறது என்பது நமக்குத் தெரியுமா?  அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.  வலந்தலையையும் தொப்பையையும் இணைக்க வேண்டும் இல்லையா?  அதற்கு மாட்டுத்தோல் வார்கள்தான் பயன்படுகின்றன.  இதைச் சேர்ப்பதற்கு வார் பிடித்தல் என்பார்கள்.  அதெல்லாம் சரி, கையால் தட்டும்போது விரல்களில் தொப்பி மாதிரி அணிந்திருப்பார்களே, அதற்கு என்ன பெயர்?  மறந்து விட்டேன்.  சரி, இதெல்லாம் விவரங்கள்.  ஆனால் சோமன் இதை விவரமாகச் சொல்ல மாட்டார்.  எல்லாவற்றுக்கும் பல கதைகளோடுதான் சொல்லுவார். எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.  பெண்கள் சொன்ன ஏராளமான கதைகளும் உண்டு.  ஆயிரமாயிரம் பக்கங்கள் வரும்.  சமீபத்தில் அல்லிக்கேணி எழுதிய ராம்ஜி அந்த அல்லிக்கேணியில் சொல்லாத பல நூறு கதைகள் உண்டு.   மூன்று வருஷம் பார்ப்பேன்.  அவர் அதை எழுதவில்லை என்றால், அல்லிக்கேணியில் சொல்லாத கதைகள் என்று நானே அதையெல்லாம் எழுதி விடுவேன்.  இப்படி எத்தனையோ.  எனவே மனிதர்களோடு பழகுவதில்லை என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை அவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதும். 

கோபி கிருஷ்ணன் சந்திப்பு பற்றி இன்னொரு கடிதம், கேள்வி.

டியர் சாரு,

க.நா.சு உரையில் நான் பங்கேற்றேன். பாழாய்ப் போன இண்டர்நெட் எனக்கு 1gb தான் என்பதால் இரண்டரை மணி நேரத்தில் முழு டேட்டாவும் சுவாகா. 

“என்னோடு பேசக் கூட மொபைல் டேட்டா சேமிக்காமல் அப்படி என்ன உரை கேட்டாய்? போ பேசாதே! உனக்கு என்னை விட சாரு தான் முக்கியம்ல?” என்று புலம்பித் தள்ளிவிட்டாள் என்னவள். உறவில் சுமூகம்தான், பாதகம் ஒன்றுமில்லை.

கோபி கிருஷ்ணன் பற்றிய உங்களது உரை நிகழும் போது இந்த இடையூறு வந்து விடக் கூடாதெனவே broadband வசதியுள்ள நண்பனது வீட்டிற்குச் செல்ல இருக்கிறேன்.

தற்போது இரு கேள்விகள்:

1. நீங்கள் கொடுத்த இணைப்பில் இருந்த கோபி கிருஷ்ணனின் சிறுகதைகளைப் படித்தேன். Auto fiction ஆக மட்டுமே இருந்தன அக்கதைகள். Auto fiction இயல்பினால் கதைகள் படிக்க அதிக சுவாரசியமாகவும் நெருக்கமாகவும் இருந்தன. ‘நான்’ என்று கதையை நகர்த்துவது திட்டமிடலா? அல்லது கதையோடு ஒன்றிப் போய் எழுத எழுத்தாளன் உருவாக்கும் உத்தியா?

2. பீடி போன்ற கதைகளை ஏன் தமிழின் சிறந்த நூறு கதைகளில் சேர்க்கவில்லை? (எஸ்.ரா ‘புயல்’ கதையைச் சேர்த்திருக்கிறார்) அவ்வளவு சிறப்பு!

ஆனால் வாசிக்கும் போதெல்லாம் கோபி கிருஷ்ணன் இறுதிக் காலத்தில் டீயும் தம்மும் கூட வாங்கப் பணமின்றி தவித்த செய்தி நினைவில் உதித்து பாரத்தை தந்தது. 

அவரது எல்லாக் கதைகளிலுமே எதோ வகையில் புகை நுழைந்து விடுகிறது. பெண்களோடு உள்ள உறவு அடுத்தக்கட்ட நகர்தலுக்குப் போகாததும் தொடர்ச்சியாக அவரது சிறுகதைகளில் இடம் பெறுகின்றன. நீங்கள் ஒருமுறை அழுகையைச் சிரிப்பாக மாற்றுவதுதான் நல்ல எழுத்து என்றீர்கள். கோபி கிருஷ்ணனின் எழுத்தில் கஷ்டங்களை அனுதின நிகழ்வாகச் சொல்லிக் கடக்கும் தன்மை இருக்கிறதே, அது ஏன்? கஷ்டங்களை ஏன் அவர் கனம் தரும் வலியாக எழுத்தில் மாற்றவில்லை?

(நான் அவரை முழுமையாக வாசித்தவனில்லை. படித்த ஐந்து சிறுகதைகளை வைத்துக் கேட்கிறேன். அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தால் பொறுக்கவும்.)

Diazepam, neuroticism போன்ற சொற்களின் பயன்பாட்டால் அவரது சுயசரிதத்தன்மை கதைகளுக்குள் நுழைந்து விடுகிறதே! அதுவும் திட்டமிடலா?

இறுதியாக:

எழுத்தாளர்கள் இப்படித் துன்பப்படக் கூடாது. ஏதேனும் செய்ய வேண்டும் சாரு. நான் வேலைக்குச் சென்றவுடன் முதலில் உங்களுக்கு சந்தா செலுத்தும் வாசகனாக விரும்புகிறேன் சாரு. விரைவில் அந்தப் பேறு அமையட்டும்.

நேசத்துடன்,

இமான்.

அன்புள்ள இமான்,

கோபி கிருஷ்ணன் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு என் உரையின் போது பதில் தருகிறேன்.  இப்போது உரையின் நேரத்தை இரவு எட்டரைக்கு மாற்றி விட்டோமே, தெரியும்தானே?  நண்பர் வீட்டில் பதினொன்று பனிரண்டு வரை கேட்க முடியுமா?  உங்களால் முழு உரையையும் கேட்க முடியாதது பற்றியும் வருந்த வேண்டாம்.  லிங்கை உங்களுக்கு அனுப்புகிறேன்.  இன்னொரு நற்செய்தியும் உண்டு. 

சதீஷ்வர் ஸூம் தவிர வேறொரு வசதி பற்றிக் குறிப்பிட்டார்.  Ciscoவின் Webex app மூலம் ஆயிரம் பேர் வரை என் உரையைக் கேட்கலாம்.  நேர வரம்பும் இல்லை.  ஒரு மாதத்துக்கு நான் செலுத்த வேண்டிய கட்டணம் 1250 ரூ.  வழக்கம்போல் நிகழ்வை ஒருங்கிணைப்பவர் சதீஷ்வர்தான்.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் webex appஐ டவுன்லோட் செய்து வைத்திருக்க வேண்டும்.  முன்னிரவு எட்டரைக்கு வர வேண்டும்.  ஒத்திகை சந்திப்பு வரும் 15-ஆம் தேதி நடக்கும்.  அதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு 15 பேர் போதும்.  எனக்கு எழுதுங்கள்.  அதே நேரம் முன்னிரவு எட்டரை.

பீடி கதை பற்றி வாஷிங்டன் வாசகர் வினோத் எனக்கு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியிருக்கிறார்.  அதைப் பற்றியும் உரையின் போது பேசுகிறேன். 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai