உலகின் மிகச் சிறந்த நாவல்

நான் தொழில்நுட்ப சமாச்சாரங்களில் பூஜ்யம். ஆனால் இளவட்டங்கள் என்னை விடவும் கீழே இருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்ட பிடிஎஃப் வேலை செய்யவில்லை என்று இருபது கடிதங்கள். கடவுளே, வேலை செய்யாவிட்டால் என்ன? இடைவெளியின் பிடிஎஃப் கிடைக்கிறது என்ற தகவல்தானே முக்கியம்?

இடைவெளி நாவல் PDF என்று கூகிளில் தட்டினால் கண் முன்னே வந்து நிற்கிறது நாவல். இதில் என்ன சிரமம் இளைஞர்களுக்கு? இருபது கடிதங்கள். அதில் ஒரே ஒருவர்தான் லிங்கைக் கொடுப்பதற்குப் பதிலாக லிங்க் முகவரியைக் கொடுத்து விட்டீர்கள் போலும் என்று என்ன தவறு என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆனால் எனக்கோ லிங்குக்கும் லிங்க் முகவரிக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாது. ஆனால் காரியத்தை முடிக்கத் தெரியும். மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்தேன், இடைவெளி நாவல் PDF பிரச்சினையே இல்லாமல் நாவல் என் கண் முன்னே வந்து விழுகிறது. இதோ உங்களுக்கும்:

https://siliconshelf.files.wordpress.com/2011/11/sampath_idaiveli.pdf