பூச்சி 132: மொழியின் அழிவு

நாவலை எழுதி முடிக்கும் வரை வேறு எந்தப் பஞ்சாயத்திலும் ஈடுபடக் கூடாது என்ற வைராக்கியம் ஒரே ஒரு வார்த்தையைப் பார்த்ததால் வயிறு பற்றி எரிந்து இங்கே வந்து விட்டேன்.  அந்த வார்த்தை கலோக்கியல்.  எழுதியவர் நம் அராத்து.  இந்தப் பஞ்சாயத்து பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.  ஹேப்பனிங் ப்ளேஸ் என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை.  ஃபீலிங் என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை.  மிஸ் யூ என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை.  லவ் யூ என்பதற்குத் தமிழில் வார்த்தை இல்லை. (ஃபக் யூ என்பதற்குப் பல வார்த்தைகள் உள்ளன.)  இப்போது எஞ்சாய்.  இப்படி நூற்றுக் கணக்கான வார்த்தைகளுக்குத் தமிழில் வார்த்தை இல்லை என்பதால் தமிழர்கள் அனைவரும் – என்னைப் போன்ற ஒன்றிரண்டு பேர் நீங்கலாக – ஒரு மாதிரி தமிழ் எழுதுகிறார்கள்.  அதில் கலோக்கியல் என்ற வார்த்தையெல்லாம் சர்வ சகஜமாகப் புழங்குகிறது.  இந்தக் கலோக்கியலை விடுங்கள்.  பத்திரிகைகளைப் பார்த்தால் தமிழ் தற்கொலை பண்ணிக் கொண்டு செத்துப் போகும்.  அப்படியெல்லாம் எழுதுகிறார்கள்.  அது என்ன கலோக்கியல்?  பேச்சு வழக்கு என்று எழுத வேண்டியதுதானே? கலோக்கியல்தான் எனக்குப் புரியாதது.  பேச்சு மொழி என்பதுதான் புரிகிறது.  இப்படி ஆயிரக்கணக்கான வார்த்தைகள் போட்டுத் தமிழைக் கொலை பண்ணுகிறார்கள்.  அதை விடுங்கள்.  வாழ்கை என்று எழுதுகிறார்கள் ஐயா.  நான் ஏன் இந்த நாட்டில் உயிரோடு உலவுகிறேன் என்று இருக்கிறது. 

எஞ்ஜாய் என்று உரையாடலில் வரலாம்.  (இங்கே உரையாடல் என்று கூட எழுத மாட்டார்கள்.  கான்வர்சேஷனில் வரலாம் என்று எழுதுவார்கள்.) ஆனால் ஒரு எழுத்தாளரின் பிரதியிலேயே வரலாமா?  கொலைக்கு சமம்.  தமிழ்க் கொலை.  தமிழைக் கொலை பண்ணினால் தண்டனை எதுவும் இல்லை.  பாராட்டுதான் கிடைக்கும்.  சமகாலத்தில் நிற்கிறாய் என்று.  இளைஞர்கள் இப்படித்தான் எழுதுகிறார்கள் என்று ஒரு வாதம்.  யார்ரா அது இளைஞன்.  தமிழே எழுதத் தெரியாதவன் இளைஞனா?  அவன் எதற்கு நமக்கு?  எஞ்சாய் என்று எழுதினால்தான் இந்தக் காலத்தை நான் எழுத்தில் கொண்டு வர முடிகிறது.  ஜாலியாக இரு.  ஜாலி என்று ஒரு வார்த்தை இருக்கிறதே?  அப்படியே வார்த்தை இல்லாவிட்டாலும் கதையில் எழுத்தாளரின் கூற்றிலேயே ஆங்கிலத்தைக் கலந்தால் மொழி செத்து விடும்.  ஏனென்றால் தமிழ் ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறது.  கிட்டத்தட்ட தமிழ் பேச்சு மொழி ஆகி விட்டது.  யாருக்குமே எழுதத் தெரியவில்லை.  பெரிய பெரிய எழுத்தாளர்களின் எழுத்திலேயே ஏகப்பட்ட பிழைகள்.  நான் ஒற்றெழுத்துப் பிழைகளை மட்டும் சொல்லவில்லை.  சமீபத்தில் ஒரு அனுபவம்.  ஒரு பக்கத்தில் பத்து ஒற்றுப் பிழைகள்.  வரிக்கு இரண்டு பிழைகள்.  இது தவிர இலக்கணப் பிழைகள்.  இதுக்கும் மேல்தான் இந்த எஞ்சாய், கலோக்கியல் எழவு எல்லாம். 

இன்னும் ஐம்பதே ஆண்டுகள்.  தமிழ் செத்து விடும்.  அப்போதும் தமிழில்தான் எழுதுவார்கள்.  அது, இப்போது தொலைக்காட்சியில் பேசுகிறார்கள் இல்லையா, அதுவே எழுத்து மொழியாகி இருக்கும்.  தமிழ் மொழியில், அதன் ஒலியில் எத்தனையோ போதாமைகள் உள்ளன.  ஆ(ங்) என்று வாயை மூடாமல் சொல்வதை எழுதுவதற்கு வசதி இல்லை.  இன்னும் எத்தனையோ ஒலிகளை எழுதிக் காட்ட முடியாது.  நேற்று வந்த டப்பா மொழியான இந்தியில் உள்ள நான்கு விதமான க, த, ட, ப போன்ற பாகுபாடுகள் இல்லை.  தண்ணீருக்கு வரும் ’த’வையும், தனத்துக்கு வரும் ’த’வையும் ஒரே மாதிரிதான் எழுத வேண்டும்.  கேட்டால் தனம் தமிழ் வார்த்தை இல்லை என்பார்கள்.  இப்படிப்பட்ட போதாமைகள் எல்லா மொழிகளிலும் உண்டு.  ஆனாலும் உலக மொழிகளிலேயே தமிழும் சம்ஸ்கிருதமும் மிக மேன்மையான மொழிகள் என்பதில் சந்தேகமே இல்லை.  ஒரு மொழியின் மேன்மைக்கு அடையாளம் அதன் இலக்கணம்.  அதில் இந்த இரண்டும் உச்சத்தில் நிற்கின்றன.  சம்ஸ்கிருத மொழியின் இலக்கணத்தைக் கண்டு மொழியியலாளர்கள் மூக்கில் விரல் வைக்கிறார்கள்.  இதெல்லாம் எப்படி மனித மூளையால் சாத்தியம் என்ற அளவுக்கு இருக்கிறது அந்த மொழியின் இலக்கணம்.  இலக்கியத்துக்கும் குறைவில்லை.  இரண்டு மொழியுமே கடல்.  ஆனாலும் இன்று சம்ஸ்கிருதம் செத்து விட்டது.  யாரோ ஒன்றிரண்டு பேர் படிக்கிறார்கள்.  ஆயிரத்தில் ஒருத்தர் கூடக் கிடையாது.  பிராமண இனமே சம்ஸ்கிருதத்தை ஒதுக்கி விட்டது.  அதற்கு மேல் அதைக் கொள்வார் யார் உளர்?  யாருக்கும் வேண்டாத மொழி.  யாருக்கும் பிடிக்காத மொழி.  ஆங்கிலேயர்களில் எத்தனையோ சம்ஸ்கிருத அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.  அவர்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ள இலக்கியச் செல்வங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அள்ளி அள்ளிச் சென்றிருக்கிறார்கள்.  சும்மா போகிற போக்கில் இதை நான் எழுதவில்லை.  பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்ட அப்படிப்பட்ட பொக்கிஷங்கள் பலவற்றைப் படித்து விட்டே இதை எழுதுகிறேன். 

பல வைர வைடூரியப் புதையல்களைக் கொண்டுள்ள சம்ஸ்கிருதம் இன்று நாதியற்றுப் போய் விட்டது.  போதாக்குறைக்கு கொடும் ஃபாஸிஸ்டுகளான இந்துத்துவர்களின் கைகளில் வேறு அது ஒரு அரசியல் ஆயுதமாகப் போய் விட்டது.  அரசியல் ரீதியாக, அந்த மொழியை இந்தியாவின் ஒரு கலாச்சார அடையாளமாக அதை உயிர்ப்பிக்கப் பார்க்கிறார்கள்.  இந்தியாவின் கலாச்சார அடையாளம்தான்.  சந்தேகமே இல்லை.  ஆனால் அதை ஹிட்லர்களா சொல்வது?  யாருமே நம்ப மாட்டார்களே?  ஏற்கனவே செத்து விட்ட ஒரு மொழிக்குப் பாடை கட்டும் விஷயம்தான் இது.  மற்றபடி இந்துத்துவவாதிகளின் இந்தச் செயலால் சம்ஸ்கிருதத்துக்கு எந்தப் பயனும் இல்லை. 

ஆனால் இந்திரா பார்த்தசாரதி சொன்னார், சம்ஸ்கிருதம் எப்போதுமே அறிஞர்களின் மொழியாகத்தான் இருந்திருக்கிறது.  எப்போதுமே அது மக்களின் பேச்சு மொழியாக இருந்தது இல்லை.  நூற்றுக்கு நூறு உண்மை.  மக்களின் பேச்சு மொழியாக இருந்தது பாலி.  அது ஒரு கொச்சையான சம்ஸ்கிருதம்.  ஆனால் பாலி சம்ஸ்கிருதத்திலிருந்து உருவானது அல்ல.  என்றாலும் இலக்கணம், லிபி எல்லாம் ஒன்றுதான்.  ப்ராமி லிபியையே இரண்டு மொழிகளும் கையாண்டு வந்தன.  பாலியை அசோகனின் அரசு பெருமளவுக்கு ஊக்குவித்தது.  சம்ஸ்கிருதம் அந்தக் காலத்திலேயே ஒடுக்கப்பட்டது.  காரணம், பௌத்தம்.  பௌத்தத்தின் மொழி பாலி.  சம்ஸ்கிருதம் பிராமண மொழி.  ஆதி சங்கரர் வரும் வரை சம்ஸ்கிருதம் ஓரத்திலேயேதான் இருந்தது.  ஆனால் அசோகரின் காலத்துக்குப் பிறகு – கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஏதோ சூ மந்திரக்காளி மாதிரி பாலி மொழி இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போய் விட்டது. 

ஒரு மொழி இலக்கிய பலம் இல்லா விட்டால் அழிந்து போகும் என்பதற்கு பாலி மொழியே சாட்சி.  பாலி மொழி கொச்சையான சம்ஸ்கிருதம்.  பாலியில் ர கிடையாது.  சம்ஸ்கிருதத்தில் தர்மம் என்றால் பாலியில் தம்மம்.  ப்ரியதர்ஸன் என்றால் பாலியில் பியாதஸ்ஸா.  இரண்டு ‘ர’க்களும் காலி.  தியானா – ஜானா.  பிக்ஷு – பிக்கு.  பாலி காணாமல் போன பிறகு சம்ஸ்கிருதம் பிராகிருத லிபியை எடுத்துக் கொண்டது.  எல்லாம் பழைய கதை.  இப்படித்தான் தமிழைப் பற்றியும் நூறு ஆண்டுகள் கழித்து எவனோ ஒருத்தன் எழுதப் போகிறான்.  போட்டிகளுக்கு வரும் கதைகளைப் படிக்கிறேன்.  பிரமாதமான கதைகள்.  ஆனால் வரிக்கு வரி பிழை.  சகிக்க முடியவில்லை.  பத்து கதை படித்தால் பத்துமே இப்படி.  யாருக்குமே எழுதத் தெரியவில்லை.  ஆனால் பிழையின்றி எழுதுவது வெறும் பத்தே நிமிடத்து வேலை.  யூட்யூபில் பல பேர் பிழையின்றி எழுதக் கற்றுத் தருகிறார்கள்.  பானுமதியின் இணைப்பை இங்கே தருகிறேன்.

ஃப்ரெஞ்ச் மொழியில் இப்படியெல்லாம் அந்நிய மொழிகளைச் சேர்ப்பதில்லை.  இதற்கு அர்த்தம், அந்நிய மொழியைச் சேர்க்கவே கூடாது என்று சொல்லும் புனிதப் பசு அல்ல நான்.  என் நாவல்களுக்கெல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பவன் நான்.  ஆனால் ஒட்டு மொத்தமாக ஒரு சூழலே நச்சுப் பிடித்து நாசமாகிக் கிடக்கும்போது நமக்கு ஒரு பொறுப்பு வேண்டாமா?  கலோக்கியல் என்றா எழுதுவது?  பேச்சு வழக்கு என்று எழுதினால் என்ன?  இளைஞன் இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் தொலைகிறான். யாருக்கு என்ன நஷ்டம்?

ஆனாலும் சொல்கிறேன்.  தமிழ் செத்து விடும்.  இன்னும் அதிக பட்சம் நூறு ஆண்டுகள்.  அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  ஏனென்றால்,

எந்த ஒரு இனமும்

எந்த ஒரு கலாச்சாரமும்

எந்த ஒரு மொழியும்

அழிந்து போகிறது என்றால் அதற்கான உட்கூறுகளை அந்தச் சமூகமே கொண்டிருக்கிறது; அழிவின் வித்து எப்போதுமே வெளியிலிருந்து வருவதில்லை

என்பது எனக்குத் தெரியும். 

எனவே தமிழ் அழிகிறது என்றால், அதற்குக் காரணம், இந்தச் சமூகம் இலக்கியத்தைப் புறக்கணித்ததுதான்.  அதற்கு நான் ஒரு தனியாள் ஏன் வருத்தப்பட வேண்டும்?  நான் என்ன கடவுளா?  வெறும் எறும்பைப் போன்ற ஆயுள் கொண்ட ஒரு சிறியன்.  இதில் நான் வருத்தப்பட என்ன இருக்கிறது?  ஆனால் இன்று கலோக்கியல் என்று எழுதும் ஒவ்வொருவருக்கும் இந்த அழிவில் பங்கு இருக்கிறது.  ஆனாலும் அந்தப் பங்கு கடுகளவுதான்.  பெரும் பங்கை இலக்கியத்தைப் புறக்கணித்து விட்ட இந்தச் சமூகம்தான் ஏற்றுக் கொண்டாக வேண்டும். 

இன்னொன்றும்.  ஒரு மொழி அழிந்து போனால் கடவுளே வந்தாலும் அதை உயிர்ப்பிக்க முடியாது.  இப்போது இந்துத்துவவாதிகள் எத்தனையோ பிரம்மப் பிரயத்தனம் செய்தும் சம்ஸ்கிருதத்தில் ஒரு சலனத்தைக் கூட ஏற்படுத்த முடியவில்லை பாருங்கள். 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai