Pithy thoughts – 14

ஆயுதங்கள் மாறின

தேசங்கள் மாறின

குதிரை விமானமாயிற்று

ஆனாலும்

காதலில் தோல்வியுற்ற

மனிதன்

இன்னமும்

மதுவைத்தான் நாடி

ஓடிக் கொண்டிருக்கிறான்

கணவனின் துரோகம்

தாங்க முடியாத பெண்

இன்னமும்

அரளி விதையைத்தான்

அரைத்துக் கொண்டிருக்கிறாள்

இன்னமும் ஒரு குழந்தை

தாயைத் தேடி

அழுது கொண்டிருக்கிறது