6 டிசம்பர் ஞாயிறு காலை 6 மணி: புதுமைப்பித்தன்

நாளை காலை – அதாவது இந்திய நேரப்படி ஞாயிறு காலை ஆறு மணிக்கு புதுமைப்பித்தன் சிறுகதைகள் பற்றிய என் உரை நடைபெறும். உரை முடிந்து கேள்வி பதில் பகுதி உண்டு. நண்பர்கள் தங்கள் கேள்விகளை சந்தேகங்களைக் கேட்கலாம். நீண்ட நேரம் பேச வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி எந்தத் தயக்கமும் தேவையில்லை. சுதந்திரமாக இருங்கள். நான் உரையாற்றும் போது ஆடியோ முக்கியமாக விடியோவை ஆஃப் செய்து வைத்திருங்கள். விடியோவில் யாரையேனும் பார்த்தால் என் கவனம் தவறுகிறது. ஆனால் கேள்வி நேரத்தின் போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாளைய உரையில் ஒரு முக்கியமான பகுதி விளக்கம் ஒன்று தர இருக்கிறேன். அதன் மேலோட்டமான பொருள் உடனடியாகப் புரிந்து விடும். ஆனால் உள்ளார்ந்த அர்த்தம் புரிய பல பத்தாண்டுகள் கூட ஆகலாம்.

இந்த மாதாந்திரக் கூட்டத்தை, பேச்சை ஆர்வமாகக் கேட்கும் ஒரு இருபது முப்பது பேர் இருக்கிறார்கள். இன்னொரு முப்பது பேர் பணம் கொடுத்து காணொலியை வாங்கிப் பார்க்கிறார்கள். இந்த அறுபது பேருக்காகத்தான் மாதாமாதம் பேசுகிறேன். இது குறித்து இன்று வந்த ஒரு வாட்ஸப் செய்தி இது:

Sir – your speech about Puthumaipithan was very engaging, natural and informative.. the pace with which you speak is very slow but I could not turn off the audio even for a second.. such was your rendition.. it reminds me of the movie “no country for old men”…this movie does not have any background music or any cheap tactics but it is entertaining as hell.. thank you sir.

டொரண்டோவிலிருந்து நந்தா என்ற நண்பர் எழுதியிருந்தார். உண்மையில் நான் சற்று மனச்சோர்வில் இருந்தேன். இப்படி மாதாமாதம் பேசுவது பயனுள்ள காரியம்தானா என்ற சந்தேகத்தில் வந்த சோர்வு. இந்தக் கடிதத்தைப் பார்த்ததும் சோர்வு நீங்கி விட்டது. அடுத்த மாதம் தி.ஜானகிராமன். நாளைய சந்திப்புக்கான விவரங்கள்: