இசை பற்றிய சில குறிப்புகள்

நாளை காலைக்குள் இசை தொடரின் அடுத்த அத்தியாயத்தைப் பதிவேற்றுவேன். இசை கட்டுரையை ஒரு ஓட்டத்தில் எழுதி விட இயலாது. பல மணி நேரங்கள் இசைக் கச்சேரிகளைக் கேட்க வேண்டும். ஏற்கனவே பல முறை கேட்டிருந்தாலும் எழுதுவதற்கு முன் ஒரு முறை கேட்டு விட்டால்தான் எழுத வசதி. எனவேதான் இத்தனை நேரம் ஆகும் என்றேன்.

அடுத்த கட்டுரை இசை தொடரின் ஆறாவது அத்தியாயம். அந்த ஆறாவது அத்தியாயத்தைப் படித்துத் தொடர இந்த நான்காவது அத்தியாயத்தைப் படித்து விடுவதே நல்லது. ஏற்கனவே படித்திருந்தால் இதில் உள்ள அரியக்குடியின் கச்சேரிகளையாவது கேட்டு விடுங்கள். நான் கொடுக்கும் லிங்குகள் வேலை செய்யவில்லையானால் நீங்களே அரியக்குடி என்று போட்டால் ஏராளமாக வரும். அதில் தேர்ந்தெடுத்துக் கேட்க வேண்டும். பொதுவாக ஆல் இண்டியா ரேடியோ ஒலிப்பதிவு நன்றாக இருக்கும். நீங்கள் கேட்கும் இசையின் ஒலிப்பதிவு நன்றாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் ரசிக்காது. பின்வரும் அத்தியாயத்தைப் படித்து அதற்குப் பிறகு கடைசியில் வரும் அரியக்குடி கச்சேரிகளைக் கேட்டுப் பாருங்கள்.