2. சிவப்புக் கலர் பால் பாய்ண்ட் பேனா

இன்று ஒரு பிரபல பில்டர் போன் செய்து உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் சார் என்றார்.

ரொம்ப நாளாக எனக்கு சிவப்பு நிற பால் பாய்ண்ட் பேனா தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் நோட்டுப் புத்தகத்தில்தான் எழுதுகிறேன். ஒரு நண்பர் நோட்டுப் புத்தகமும் வாங்கிக் கொடுத்து விட்டார். நாலு நோட்டு ஆர்டர் பண்ணி ஒண்ணுதான் வந்தது. மூணுக்கு புகார் செய்திருக்கிறார். அமேஸான்.

ஆக, இன்றைய தேவை சிவப்புக் கலர் பால் பாய்ண்ட் பேனா. அதைக் கேட்டேன். நாளை வாங்கிக் கொண்டு வந்து தருகிறேன் என்றார் பில்டர் நண்பர்.

சரி வாருங்கள் என்றேன். மேலும் சொன்னேன், ஆறு அடி தூரத்தில் நின்றுதான் பேச வேண்டும்.

அதற்கென்ன சார், பத்தடி தூரத்தில் நின்றே பேசிக் கொள்ளலாம் என்றார்.

சரி என்றேன்.

சரி சார் என்றார்.

எதையெல்லாம் நீ துறக்கிறாயோ அது எல்லாம் உன்னை நாடி வரும். ஆனால் துறந்த பிறகு அதன் தேவை இராது. துறக்கும் வரை தேவை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் கிடைக்காது.