சாருவுடன் சில தினங்கள்…

வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது என்ற  கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின் வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால் அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது ஒரு தவறான கருத்து.  காரணம்? சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள்.  என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே … Read more

க்ராஸ்வேர்ட் விருது – சில விளக்கங்கள்

இந்த விருது பற்றி கருத்து சொல்லும் என் சக எழுத்தாளர்கள் சிலர் புத்தகத்தைப் படிக்காமல் வாக்கு அளிப்பது சரியல்லவே என்ற அறக் கேள்வியை எழுப்பியிருக்கின்றனர். இப்படி எழுப்பி எழுப்பித்தான் ஞானபீட விருது மலையாளத்துக்கு ஏழெட்டு, கன்னடத்துக்கு ஏழெட்டு, ஹிந்திக்கு ஒன்பது, வங்காளத்துக்கு ஏழெட்டு என்று கொடுக்கப்பட்டது. தமிழுக்கு மட்டும் ரெண்டு. அதுவும் அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும். காரணம் என்ன என்றால், இம்மாதிரி அறக் கேள்விகள்தான். ஏழெட்டு என்று உத்தேசமாக எழுதியிருக்கிறேன். அதற்கும் மேலேயே இருக்கும். நிச்சயம் பாருங்கள், இந்தியாவுக்கு … Read more

அட்டைக்கத்தியுடன் போர்க்களத்தில் இறங்கியவன்

க்ராஸ்வேர்ட் விருது குறும்பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் என்னுடைய நான் தான் ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Conversations with Aurangzeb: A Novelஉம் இடம் பெற்றுள்ளது. கூடவே கேரள எழுத்தாளர் ஏ.ஜே. தாமஸின் நூலும் உள்ளது. இந்நேரம் கேரளத்தில் மாத்ருபூமியிலும், மலையாள மனோரமாவிலும் இது பற்றிய விரிவான செய்தி அவரது புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் வந்திருக்கும். ஒவ்வொரு தினசரிக்கும் லட்சக்கணக்கில் வாசகர்கள் உண்டு. ஒவ்வொன்றுக்குமாக முப்பதாயிரம் என்றாலும் இந்நேரம் அறுபதாயிரம் பேர் தாமஸின் நூலுக்கு வாக்களித்திருப்பார்கள். எனக்கு … Read more

Crossword Book Awards…

Crossword Book Awards – Crossword.in Crossword Book Awards இந்தியாவில் மிகவும் கௌரவமான விருதாகக் கருதப்படுகிறது. இதன் குறிப்பிட்ட அம்சம் இதைத் தேர்ந்தெடுப்பது ஒரு குழு அல்ல, வாசகர்கள். இந்த விருதுக்கு இந்த ஆண்டுக்கான மொழிபெயர்ப்பு நூல்களுக்கான குறும்பட்டியலில் Conversations with Aurangzeb: A Novel தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது மேலும் மேலே செல்ல வேண்டுமானால் நீங்கள் இதற்கு வாக்கு அளிக்க வேண்டும். அதற்கான விவரம் மேலே உள்ள இணைப்பில் உள்ளது. உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.

திரும்பி விட்டேன்…

இரண்டு வார ஜப்பானியப் பயணம் இனிதே முடிந்து நேற்று (24.10.2024) நள்ளிரவு சென்னை வந்து சேர்ந்தேன். பொதுவாக என் தோற்றத்தின் காரணமாகவோ என்னவோ கஸ்டம்ஸில் என்னை வாட்டி எடுப்பார்கள். நேற்று அப்படி எதுவும் சம்பவம் நடக்கவில்லை. ஜப்பான் ஒரு சில விஷயங்களில் மலிவாகவும் ஒரு சில விஷயங்களில் நம்ப முடியாத அளவுக்கு செலவு வைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இப்போது ஆகியிருக்கும் செலவில் நான் இரண்டு வாரம் சீலே, கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்திருக்க முடியும். சீலேயில் … Read more

வர்ண மேகங்களிடையே இருந்து… (நெடுங்கதை) மனுஷா ப்ரபானி திஸாநாயக்க சிங்களத்திலிருந்து தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

(ஒரு முன்குறிப்பு: மனுஷா ப்ரபானி திஸாநாயக்கவின் இந்த நெடுங்கதையைத் தமிழில் ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வாசித்த போது எனக்கு இரண்டு எண்ணங்கள் தோன்றின. தமிழில் இத்தனை தீவிரமான erotic எழுத்தை இதுவரை நான் எதிர்கொண்டதில்லை. அதுவும் ஜனன உறுப்புகளின் பெயர் பதியாமல். இரண்டாவது, இத்தனை தீவிரமான எழுத்தை அதே வீரியத்துடன் தமிழில் கொண்டு வந்த ரிஷான் ஷெரீபின் லாவகம். இதை வாசிக்கும்போது இன்னொரு லத்தீன் அமெரிக்கச் சிறுகதை ஞாபகம் வந்தது. அந்தக் கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை … Read more