குடியும் ஃபாஸிஸமும் – அராத்து

குடி – கார்ல் மார்க்ஸுடன் ஒரு உரையாடல் 🙂 அராத்து குடி நோயாளிகள் என்று கார்ல் மார்க்ஸ் எழுதிய நீண்ட கட்டுரையைப் படித்தேன். தூக்கி வாரிப் போட்டது அவர் கட்டுரையில் நான் கண்ட ஒரே ஒரு உண்மை,இப்போது பலரும் இளம் வயதில் குடிப்பதனால் இறந்து போகிறார்கள். இதற்கு காரணம் குடி அல்ல. இங்கே தமிழ் நாட்டில் கிடைக்கும் மது மதுவே அல்ல , விஷ சாராயம். நாம் பேச வேண்டியது அதைப் பற்றித்தான்.இதோ பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியில் … Read more

கெட்ட வார்த்தை

நான் பலமுறை சொல்லியும் எழுதியும் நண்பர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை.  ஆனால் நானோ வெறுமனே வாய்வார்த்தையாகச் சொல்பவன் அல்ல.  எனவே மீண்டும் நினைவூட்டுகிறேன்.  புத்தகங்களுக்காகக் கொடுக்கப்படும் ராயல்டி பணம் என்னுடைய சோப்பு செலவுக்குக் கூட காணாது.  பதிப்பகங்களும் பெரிதாகப் பணம் ஈட்டுவதாகத் தெரியவில்லை.  ஆனாலும் பதிப்பகங்களும் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன.  இதையெல்லாம் ஏதோ passion என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  இந்த நிலையில் டிசம்பர் ஜனவரி மாதங்களில் புத்தக வெளியீட்டு விழாவுக்காக தினந்தோறுமே அழைப்பு வருகிறது.  நான் … Read more

ந. முத்துசாமி அஞ்சலிக் கூட்டம் – அடியேனின் உரை

பழுப்பு நிறப் பக்கங்களைப் படித்தவர்களுக்குத் தெரியும், ந. முத்துசாமி என் இலக்கியத்தின் தகப்பன் என்று. அறிதலை (perception) எனக்குக் கற்பித்தவர் அசோகமித்திரன். அறிந்து கொண்டதைச் சொல்வது எப்படி என்று கற்பித்தவர் ந. முத்துசாமி. அவரது நினைவஞ்சலிக் கூட்டம் இன்று லயோலா கல்லூரியில் நடந்தது. மொத்தம் 50 பேர் பேசினார்கள். ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடம். அந்தக் குறைந்த கால அளவில் நான் என் தகப்பனைப் பற்றிப் பேசினேன். இன்று பூராவும் எனக்குச் சந்தேகமாகவே இருந்தது, பேச முடியுமா, அல்லது … Read more

யார் அந்த ஏழு பேர்?

டாஸ்மாக் பாரில் பணியாளனாக வேலை செய்யும் 14 வயதுப் பொடியன் ஒருவனுக்கு ஏழு பேர் பற்றித் தெரியுமா? எந்த ஏழு பேர் என்றுதானே கேட்பான்? திரு ரஜினிகாந்த் அவர்களுக்கும் அந்த அளவுக்குத்தான் பொது அறிவும் அரசியல் அறிவும் உள்ளன. உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டதற்கே தலை சுத்துது என்று சொன்ன அரசியல் ஞானி அவர். அவர்ட்ட போய் ஏனய்யா இப்படியெல்லாம் கேட்டு மன உளைச்சல் பண்ணுகிறீர்கள்? விலங்கினங்களைத் துன்புறுத்தக் கூடாது என்று மேனகா காந்தி … Read more

டிக் டாக் – அவுத்துப் போட்டு ஆடு – அராத்து

டிக் டாக் – அவுத்துப்போட்டு ஆடு ! தமிழ் நாட்டில் பெரும்பாலான பெண்கள் தன்னை சினிமா ஹீரோயினாகவே நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். சினிமா என்பது கேளிக்கை மட்டுமல்ல இவர்களுக்கு. அவர்கள் வாழும் வாழ்க்கையையே ஒரு சினிமாவாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த ஆப்பின் மூலம் தெரியவருகிறது. இவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. தங்கள் வாழ்வையை , சினிமாவில் இருந்து எடுக்கும் சீன்கள் மூலம் நிரப்பிக்கொள்கிறார்கள்.தங்கள் வாழ்வின் எந்த சிச்சிவேஷனிலும் , அதற்கு சம்மந்தப்பட்ட சினிமா … Read more

என் புத்தகங்கள் கிடைக்கும் இடம்

இங்கே வந்ததிலிருந்து பல நண்பர்கள் என் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  முக்கியமாக பழுப்பு நிறப் பக்கங்கள், நிலவு தேயாத தேசம்.  இந்தப் புத்தகங்கள் அனைத்தும் அமீரக புத்தக விழாவில் ஷார்ஜா தூசு படிந்து கிடக்கின்றன யார் கையும் படாமல். இன்றுதான் கடைசி தினம்.  கேட்ட நண்பர்கள்-தேவைப்படும் நண்பர்கள் அனைவரும் அங்கே சென்று அதை வாங்கிப் பயன் அடையும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மாத்ருபூமி அரங்கில் என்னுடைய புத்தகங்கள் கிடைக்கும். தமிழ் அரங்குகளில் கிடைக்காது.