மனிதன் – தெய்வம் – ???????

நடிகர் சிவகுமார் ஒரு மனிதரின் செல்போனை மிகக் கோபத்துடனும் ஆவேசத்துடனும் தட்டி விட்ட செயலுக்கு I am sorry என்று சொன்ன விடியோ பதிவைப் பார்த்தேன். இது பற்றியும் கொஞ்சம் சொல்ல இருக்கிறது. என் நண்பர்களிடம் அடிக்கடி நான் சொல்லும் விஷயம் இது. மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தப்பு செய்தால் அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று தப்புக்கு மேல் தப்பு செய்கிறார்கள். அதையேதான் சிவகுமாரும் செய்திருக்கிறார். அதாவது ஒரு “கலைஞனாக” அவர் செய்தது தப்பே … Read more

அராஜகம் பலவிதம்…

சிவகுமாரோடு ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயல்கிறார். உடனே அந்த போனை ஆக்ரோஷமாகத் தட்டி விடுகிறார் சிவகுமார். போன் எங்கோ பறந்து போய் விழுகிறது. காணொளியில் இந்தக் காட்சியைப் பார்த்தேன். தமிழ்நாட்டில் அல்லது இந்த உலகத்திலேயே ஒரு எழுத்தாளனாவது இப்படிச் செய்வானா? எத்தனை பெரிய அராஜகம் இது? அனுமதி கேட்க வேண்டியதுதான். ஆனால் அனுமதி இல்லாமல் செல்ஃபி எடுத்ததற்கு இப்படியா அராஜகமாக நடந்து கொள்வது? உண்மையில் சிவகுமார் அந்த அன்பரை அடித்திருக்க வேண்டும். அதைத்தான் எல்லா சினிமா … Read more

ராட்சசன்

திரைக்கதையில் ராட்சசன் போல் சுத்தமாக இருந்த ஒரு தமிழ் சினிமாவைப் பார்த்ததில்லை என்ற அர்த்தத்தில் ராஜேஷ் எழுதியிருந்த பதிவைப் பார்த்து விட்டு, நேற்று ராட்சசன் போனேன். இயக்குனர் ராம்குமார். நான் கொரியன் த்ரில்லர் படங்களையும் அடிதடி சண்டைப் படங்களையும் மிக விரும்பிப் பார்ப்பவன். சொல்லப்போனால் என் ஒரே பொழுதுபோக்கு அதுதான். கிட்டத்தட்ட எல்லா கொரியன் படங்களையும் பார்த்து விட்டதால் இப்போது ஹாலிவுட் சீரியல்களைப் பார்க்கிறேன். ஆனால் கேம் ஆஃப் த்ரான்ஸ் அளவுக்கு விறுவிறுப்பான சீரியல்கள் கம்மிதான். Breaking … Read more

அதிகாரம் அமைதி சுதந்திரம்

நான் எழுதிய அதிகாரம் அமைதி சுதந்திரம் நூல் இன்னும் சில தினங்களில் வெளிவரும். முன்பதிவு செய்யுங்கள். புத்தகத்திலிருந்து ஒரு பத்தி: நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை. அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை , ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்… யாரையும் எதையும் பின்பற்றாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்கள் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும், … Read more

தீபாவளி

தீபாவளிகள் எப்போதுமே எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை. வெடிச்சத்தம். அதோடு, காலையில் பட்டினி வேறு கிடக்க வேண்டும். தீபாவளியும் அதுவுமாக ஓட்டலில் சாப்பிட மனம் இஷ்டப்படாது. மனம் தானே துன்பத்தை உருவாக்கும் கேணி? நண்பர்களின் வீடுகள் உறவுக் கூட்டத்தால் நிறைந்திருக்கும். தீபாவளி அன்று வயிறு காயும் போதெல்லாம் எனக்கு மலையாளக் கவி பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சிதம்பர நினைவுகள் ஞாபகம் வரும். பாலச்சந்திரன் இளைஞனாக இருக்கும் போது – அப்போதே அவர் பிரபலமான கவி – வீட்டிலிருந்து வெளியேறி பராரியாக … Read more