விஸ்வரூபம்

ரஜினியிடம் எந்த ஆபத்தும் இல்லை.  அவர் மிகத் தெளிவாகத் தன்னை முன்வைத்துக் கொள்கிறார்.  கொள்கை என்ன என்று கேட்டால் தலை சுத்துது என்கிறார்.  போராட்டக்காரர்கள் சமூக விரோதிகள் என்கிறார்.  அவர் படத்தில் வரும் வில்லன் ஹரி தாதா மாதிரியே நேர் வாழ்வில் பேசுகிறார்.  ஆனால் ஒரு ஆள் நம்மைப் போல் பேசி ஹரி தாதா போல் செயல்படுகிறார்.  அவர்தான் கமல்.  கமல் ஒரு இந்துத்துவா என்றால் என் இந்துத்துவ நண்பர்கள் சிரிக்கிறார்கள்.  அதுதான் கமலின் வெற்றி.  அவரது … Read more

காலா

நேற்று காலா பார்த்தேன். ஸ்ரீராம் மட்டும் பக்கத்தில் இருந்திராவிட்டால் அரை மணி நேரத்திலேயே எழுந்து வந்திருப்பேன். முதல் ஒரு மணி நேரம் தமிழ் டிவி சீரியலைப் போலவே இருந்தது. ரஞ்சித் பாவம் சின்ன பையர். இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு சூப்பர் ஸ்டாருக்கு இப்படியா ஓப்பனிங் சீன் வைப்பார்? பொடிப்பசங்களோடு சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் ஆடுகிறார். முதல் பந்திலேயே க்ளீன் போல்ட். இதுக்கு ஏன் ஐயா சூப்பர் ஸ்டார்? பேசாமல் ராஜ் … Read more

காலா – எண்டெர்டெயின்மெண்டா ? அரசியலா ? – அராத்து

முதலில் எண்டர்டெயின்மெண்ட் :- நான் ரஜினி படங்களை ஜாலியாக ஒரு எண்டர்டெயின்மெண்டாகத்தான் பார்ப்பேன். காலா என்னை இந்த விஷயத்தில் முழுமையாக ஏமாற்றியது. என்னால் தியேட்டரில் உட்காரவே முடியவில்லை. நெளிந்து கொண்டு இருந்தேன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற சுவாரசியம் ஒரு மண்ணும் இல்லை. சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் காட்சிக்கோர்வைகள் நகர்ந்து கொண்டு இருந்தன. சரி , ஒரு நச் காமடி , இல்லை , ஹீரோ – வில்லன் புத்திசாலி விளையாட்டுக்கள் என்று ஒன்றுமே இல்லை. ஏன் … Read more

டாக்டர் அயெந்தே உங்கள் இல்லத்துக்கு வந்திருக்கிறாரா?

நேற்று தமிழ் ஸ்டுடியோஸ் அருணின் மாணவர்கள் மூன்று பேர் என்னைப் பேட்டி கண்டார்கள்.  ஒளிப்பதிவு செய்யப்பட்டது.  மொத்தம் நான்கு மணி நேரம்.  இப்படி ஒரு பேட்டியை நான் இதுவரை கொடுத்ததில்லை.  இனிமேலும் கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை.  காரணம், அந்த அளவுக்கு என்னை வாசித்திருந்தார்கள்.  அவர்கள் தென்னமெரிக்க நாடுகள் பற்றிக் கேட்ட போது என் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன.  ஏன் கலங்க வேண்டும்?  40 ஆண்டுக் காலமாக தொலைதூரத்தில் இருக்கும் தன் தாயைக் காணாத ஒருவனின் … Read more

அராத்துவின் ‘பனி நிலா’

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அராத்துவின் பனி நிலா என்ற கதையைத் தட்டச்சுப் பிரதியில் படித்தேன்.  அப்போது நான் அவரிடம் சில வார்த்தைகளைச் சொன்னேன்.  அதே வார்த்தைகளை – ஒரு வார்த்தை பிசகாமல் – சாதனா இதே கதை பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார்.   உங்களால் நம்ப முடியாது.  கதையைப் படித்து விட்டு இதே வார்த்தைகளைத்தான் அராத்துவிடம் சொன்னேன். “விகடனில் அராத்துவின் ‘பனி நிலா’ வாசித்தேன். ஒரே வார்த்தையில் சொல்வதாகயிருந்தால் அபாரம். அந்தக் கதை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் … Read more