ஆசிஃபா – 2

நான் ArtReview Asia பத்திரிகையில் எழுதி வரும் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும்.  திரும்பத் திரும்ப சொல்கிறேன்.  இந்தியா 1930களில் இருந்த ஜெர்மனியைப் போல் மாறிக் கொண்டு வருகிறது.  இந்தியர்களின் மனதில் மதத்துவேஷம் என்ற விஷம் விதைக்கப்பட்டு விட்டது.  Gomorra சீரியலில் ஜென்னி இதே வசனத்தைச் சொல்வான்.  அவனுடைய தந்தை சவஸ்தானோ ஒரு எட்டு வயதுச் சிறுமியைத் தன் அடியாள் மூலம் கொன்று விடுவான்.  பழிக்குப் பழியாக சிறுமியின் தகப்பன் ச்சீரோ சவஸ்தானோவைக் கொல்வான்.  அப்போது ஜென்னி சொல்கிறான், … Read more

ஆசிஃபா

முகநூலில் ஆசிஃபா பிரச்சினை பற்றி அராத்து எழுதியது இது: ஆசீஃபா போர் , இனக்குழு கலவரங்கள் , மத வெறி , என வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் முதலில் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியும். நாகரீகம் பண்படாத அந்த காலத்தில் கூட , சிறுமிகளை சீரழித்ததாக தென்பட வில்லை. நாகரீகம் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் தான் சிறுமிகள் ஈவிரக்கம் இல்லாமல் வன்புணரப் படுவது , கொல்லப்படுவது என தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. மனிதனை நெறிப்படுத்துவதற்காக … Read more

ஏன் இலக்கியம்?

சென்னையில் உள்ள ஹிப்னாடிக் சர்க்கிள் என்ற அமைப்பின் கூட்டத்தில் “ஏன் இலக்கியம்?” என்ற தலைப்பில் நாளை (ஏப்ரல் 8) பின்மதியம் 2.29 மணிக்கு ஓட்டல் பாம்குரோவில் உள்ள வைஷாலி ஹாலில் பேச இருக்கிறேன். பல அன்பர்கள் என்னிடம் ஏன் இலக்கியம் படிக்க வேண்டும் என்று கேட்பதை அவதானித்து வருகிறேன். ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்று ஒன்றேகால் மணி நேரம் பேசுவேன். கூட்டம் முடிந்து சிற்றுண்டி உண்டு என்பதால் நுழைவுக் கட்டணம் 250 ரூ.  கூட்டம் சரியாக … Read more

உலகின் மிகச் சிறந்த கவிதை

’இலக்கியத்தின் படிக்கட்டுகளில் மிக உயர்ந்த தளத்தில் வீற்றிருப்பவர் புஷ்கின்;  தால்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களின் இடம் அதற்கெல்லாம் மிகவும் கீழே’ என்பது என் கருத்து.  இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒருவர் ரஷ்ய இலக்கிய மேதைகளை முதலில் பயில வேண்டும்.  இல்லையெனில் இது ஒரு அடாவடிக் கருத்தாக மட்டுமே மனதில் பதியும். இந்த உலகின் மிகச் சிறந்த கவிதை எது என்று என்னைக் கேட்டால் ஒருக்கணமும் யோசியாமல் புஷ்கின் எழுதிய தீர்க்கதரிசி என்று சொல்வேன்.  நான் பல ஆண்டுகளாக … Read more

பாரதிராஜாவும் நானும்…

பாரதிராஜாவுடன் என் புகைப்படத்தைப் பார்த்தவுடன் ஒரு ஆசாமி “எவ்ளோ நாள் ஓடுதுன்னு பாப்போம்” என்று முகநூலில் எழுதியிருக்கிறார். பாரதிராஜாவின் படங்களை நான் புகழ்ந்து எழுதி இருக்கும் அளவுக்கு வேறு யாரும் புகழ்ந்ததில்லை. இப்போதும் சொல்கிறேன், என்னுயிர்த் தோழன் என்ற அவருடைய படம் தமிழ்நாட்டு அரசியல் பற்றிய மிக முக்கியமான பதிவு. அவருடைய படங்களில் பாடல்களை நீக்கி, கொஞ்சம் கறாரான எடிட்டிங்கும் செய்தால் அவர் உலக அளவில் பேசப்பட்டிருப்பார். மணி ரத்னத்துக்கு அந்த அதிர்ஷம் இருந்தது. பாரதிராஜாவுக்கு இல்லை. … Read more

அமேத்திஸ்டில் பூனையுடன் ஒரு விருந்து…

அமேத்திஸ்டில் சமீபத்தில் அராத்துவைச் சந்தித்தேன்.  அது பற்றி அவர் முகநூலில் எழுதிய பதிவு இது: “சாருவின் மனநிலையைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். முந்தா நாள் அவரைப் பார்க்க அமேதிஸ்ட் சென்றிருந்தேன். அவரை பார்க்க மட்டும் தான் அங்கே செல்வது! நவீன கிளியோபாட்ராக்களைக் கூட சாலையோர தேநீர்க்கடைகளில் தான் சந்திப்பது. சாரு, ஒரு சாண்ட்விச் ஆர்டர் செய்தார். ரூ 495 /- நான் ஒரு மரினாரா பீட்சா ! அதுவும் 495 /- சாப்பிட ஆரம்பித்தோம். ஒரு … Read more