Marginal Man

மார்ஜினல் மேன் மொழிபெயர்ப்பு போல் என் வாழ்வில் வேலை வாங்கிய ஒரு விஷயம் எதுவும் இல்லை.  அதில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த நண்பர்களுக்கே பதற்றம் தொற்றி விட்டது.  அப்படி ஒரு வேலை.  மயன் மாளிகையைப் போல் உருவாக்கியிருக்கிறேன்.  மொழிபெயர்ப்பில் பின்வரும் ஒரு பத்தி. Did you wonder about what happened to Whitey after I left for the Himalayas?  I had given a lot of thought to it, in fact.  … Read more

ஒரு உரையாடல்

ஷ்ருதி டிவி கபிலன் புத்தாண்டு தினத்தன்று யூட்யூபில் என்னுடைய நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்பினார்.  நானாகப் பேசினால் அஞ்சு நிமிடம் பேசுவேன்.  கேள்விகள் இருந்தால் எட்டு மணி நேரம் கூடப் பேசுவேன்.  முதல் கேள்விகளை மதுரை அருணாசலம் அனுப்பியிருக்கிறார்.  நீங்களும் அனுப்பலாம்.  கேள்விகள் இன்று இரவுக்குள் வர வேண்டும்.  நாளை காலை ஐந்து மணிக்கு ஒளிப்பதிவு உள்ளது. டியர் சாரு, 1. முப்பது வருடங்களாக தொடர் வாசிப்பில் உள்ள எனக்கு, கடந்த 10 வருடங்களாக, பெரும்பாலான நாவல்கள் … Read more

ராஸ லீலா மதிப்புரை : பாலா கருப்பசாமி

முகநூலில் பாலா கருப்பசாமி அடியேனின் நாவல் ராஸ லீலாவுக்கு எழுதிய ஒரு மதிப்புரை கீழே: ராஸலீலா – வாசிப்பனுபவம் ஒரு நாவலுக்கான வரையறைகள் அனைத்தையும் உடைத்துவிட்டு நிற்கிறது ராஸலீலா. ஆரம்பம் முடிவு தொடக்கம், காலம், வரிசை என்று எதுவுமின்றி எழுத்தாளனின் எழுத்துத் திறனின் மீதே முழுதுமாய் நிற்கிறது. ஒன்றிரண்டு வரிகளிலேயே வாசிப்பவரை உள்ளிழுக்கும் மாயாஜால நடை. ஒரு நல்ல நாவல் என்று எதைச் சொல்வோம்? ஒரு உச்சத்தைத் தொடுதல், நெகிழ்ச்சி, ஆழமான பார்வை, கவித்துவம், ஒரு வாழ்க்கையை … Read more

என் புதிய புத்தகங்கள்

பல நண்பர்கள் என் பிறந்த நாள் அன்று என்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்ரீராமைத் தொடர்பு கொண்டதாக அறிந்தேன்.  என் உயிரினும் இனிய நண்பர்களே…  ரத்தத்தின் ரத்தமே என்ற பாணியில் என்று நீங்கள் எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை.  ஏனென்றால், எம்ஜியார் உண்மையிலேயே தன் ரசிகர்களைத் தன் ரத்தத்தின் ரத்தமாகத்தான் பாவித்தார்.  அதைப் போலவேதான் நானும் என் எழுத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் என் உயிரையும் மேலாக மதிக்கிறேன்.  உதாரணமாக, நேற்று ஒரு நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.  காரணத்தையும் … Read more

ப்ரும்மம்

வொய்ட்டி, ப்ளாக்கி, ப்ரௌனி என்று மூன்று தெரு நாய்களுக்கு உணவிட்டுக் கொண்டிருக்கிறேன்.  அவைகளும் உணவுக்காகத் தெருத்தெருவாக அலைவதை நிறுத்தி விட்டு செயின் திருடர்களைப் பிடிப்பதில் கவனம் செலுத்துகின்றன.  (எங்கள் ஏரியாவில் செயின் திருடர்கள் ஜாஸ்தி.  பைக்கில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் லாவிக் கொண்டு போய் விடுவார்கள்.  அவர்களுக்கு என்ன தலையெழுத்தா, ஆறாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு தெருவைத் துப்புரவு செய்வதற்கு?)  எங்கள் தெருவின் பெயர் வெங்கடசாமி தெரு.  இந்தத் தெருவில் பதினோரு வருடங்களாக இருந்தாலும் … Read more