உறுமல், அலறல்…

இனிமேல் சுப்ரபாதமும் வேண்டாம்; ராஜாவும் வேண்டாம். யார் க்ரேடில் ஆஃப் ஃபில்த்தை ரசிக்கிறார்களோ அவர்களோடு மட்டுமே பழகலாம் என்று இருக்கிறேன். (எதை ரசித்தாலும் ஆண்களோடு பழகுவதாக இல்லை!)  என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட்டான நிம்ஃபட்டமைனை விட நல்ல பாடல் இது.  என்ன அலறல், என்ன உறுமல்.  ரகளை.  இசை பின்னணியில் ஒலிக்க இந்தப் பாடலை நான் பாட வேண்டும் போல் ஆசையாக உள்ளது.  ஆனால் அதற்கு ரெமி மார்ட்டினை எடுக்க வேண்டும்.  ம்ஹும்.  எக்காரணம் கொண்டும் அங்கே … Read more

சண்டியரும் வள்ளலாரும்…

http://www.jeyamohan.in/98542#.WR6a1X00jIU ஆசானிடமிருந்து பாராட்டைப் பெற்றதற்காக பிரபு காளிதாஸுக்கு வாழ்த்துக்கள்.  மற்றபடி, மேற்கண்ட குறிப்பில் ஒரு விஷயம் என்னைக் கவர்ந்தது.  முகநூல் சண்டியர்.  இது பற்றி நானே பலமுறை பிரபு காளிதாஸிடம் பேசியிருக்கிறேன்.  என்ன பேசினேன் என்பதன் சுருக்கம்தான் இது.  பொதுவாகவே எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படிக்கும் ஒரு வாசகருக்கு அந்த எழுத்தாளர் பற்றி ஒரு பீதியே ஏற்படுகிறது.  அந்த பீதியை ஏற்படுத்தாதவர்கள் என க.நா.சு., சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எஸ். ராமகிருஷ்ணன் என ஒருசிலரையே குறிப்பிடலாம்.  ஜெயமோகன், சாரு … Read more

காந்தி

காந்தி பற்றி எதுவுமே அறியாத முழு மூடர்கள் காந்தி பற்றி கன்னாபின்னா என்று வாய்க்கு வந்ததை உளறுவதை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படி உளறுபவர்களில் 15 வயதிலிருந்து 25 வயது வரை உள்ளவர்கள் அதிகம்.  25-க்குப் பிறகு அவர்களுக்கு மனைவியோடு பிரச்சினை பண்ணுவதிலும் அல்லது மனைவி கொடுக்கும் பிரச்சினைகளை சமாளிப்பதிலும்  பணம் சேர்ப்பதிலும் வீடு கட்டுவதிலும் குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக வளர்ப்பதிலும் நேரம் போய் விடுகிறது.  காந்தியாவது பூந்தியாவது?  ஆனால் பதினைந்திலிருந்து இருபத்தைந்து வயது வரை உள்ள … Read more

காற்புள்ளி வராது, எடுத்து விட்டேன்…

டியர் சாரு, ‘சத்திய சோதனை’ கட்டுரையில் 26-க்கும் நவம்பருக்கும் இடையில் காற்புள்ளி வராது. எடுத்துவிட்டேன்.   26 நவம்பர் 1925. ஸ்ரீராம். நேற்று அராத்து எனக்கு ஃபோன் செய்து ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார்.  என் மீது கொண்ட அதீதமான அக்கறையினால் தான் அப்படிச் சொன்னார்.  தனிப்பட்ட அன்பு என்பதை விட என் செயல்பாடுகள் இப்போது இருப்பதைப் போலவே தீவிரமாக இருக்க வேண்டும்; சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற அக்கறையே அதற்குக் காரணம்.  ஒவ்வொரு மாதமும் பனிரண்டு கட்டுரைகள் … Read more

சத்திய சோதனை – 1

ராஜீயத் துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு ‘நாகரிக’ உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன.  என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை.  அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் ‘மகாத்மா’ பட்டத்தையும் நான் மதிக்கவில்லை.  அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மனவேதனையையே தந்திருக்கிறது.  அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை. மோ.க. காந்தி சத்திய சோதனைக்கு எழுதிய முன்னுரையில். சபர்மதி ஆசிரமம். 26 நவம்பர் 1925