ஃபாஸிஸம் + கோமாளித்தனம்

மாதவராஜ் முகநூலில் எழுதியது: வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதும், கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதும் உண்மையானால் ருபாய் நோட்டுகளால் மக்களை வதைத்தவன் ருபாய் நோட்டுகளாலேயே தன் முடிவைக் காண்பான் என்பதும் உண்மையாகலாம். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி. இந்த ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நவம்பர் 8ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி வங்கிகளுக்குள் இருந்த 500 மற்றும் … Read more

கடவுள் இருக்காண்டா கொமாரு…

முகநூலில் பிரபு காளிதாஸின் செயல்பாடுகள் பற்றிப் பலவிதமான குற்றச்சாட்டுகள்.  ’பாத்து சூதனமா நடந்துக்க, இப்டியே போனா சாரு மாதிரி ஒன்னும்லாமப் போய்டுவே’ என்று கூட தலைவர் சொன்னதாகச் சொன்னார்.  ஆனாலும் நடவடிக்கைகளில் ஒன்றும் மாற்றம் இல்லை.  யாராவது அவருடைய அட்டையைத் திட்டினால், டாய்ங்… இருடா ஒன்ன வீடு தேடி வந்து போட்றேன்… என்ற மாதிரியான முகநூல் பதிவுகள்.  ஆனால் நேர்வாழ்வில் அவர் வள்ளலார் மாதிரி ஆள் என்று சொன்னால் ஒரு பயல் நம்ப மாட்டேன் என்கிறான்.  எல்லோருமே … Read more

செல்லாப் பணம் : ஒரு முக்கியமான கட்டுரை

செல்லாப் பணம் குறித்த ஒரு முக்கியமான கட்டுரையைப் படித்தேன். எழுதியவர் ஷங்கர் கோபாலகிருஷ்ணன். இந்த விஷயத்தில் கார்ல் மார்க்ஸ் போன்ற என் நண்பர்களே ஏதோ நல்லது நடக்கப் போவதாக கனவுலகத்தில் மிதந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.  ஸ்க்ராலில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் இது.  தமிழாக்கம் செய்தவர் Shahjahan R. பணத்தாள் நீக்கம் – ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி (ஸ்க்ரோல்-இன் கட்டுரையின் தமிழாக்கம்) பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது … Read more

நாடோடியின் நாட்குறிப்புகள் – 1

இனி ஒவ்வொரு திங்கள்கிழமையும் மின்னம்பலம் மின் இதழில் அரசியல், பொருளாதாரம், வான சாஸ்திரம், சமையல், இலக்கியம், பயணம், ஜோதிடம், வரலாறு, இசை, நியூக்ளியர் ஃபிஸிக்ஸ் போன்ற எல்லா விஷயங்களைக் குறித்தும் கட்டுரைகள் எழுத இருக்கிறேன். முதல் கட்டுரை, இப்போதைய பணப் பிரச்சினை பற்றி. http://minnambalam.com/k/1479666613

ஜெயமோகனுக்கு பத்மபூஷன் விருது

”அப்படியென்றால் வதந்திகளை எவர் உருவாக்குகிறார்கள்? ஏன் அவற்றை இவ்வளவு வெறியுடன் பரப்புகிறார்க்கள்?  ஊடகங்களின் உண்மையான நோக்கம் என்ன? ஸ்க்ரோல் என்னும் இணைய மஞ்சள் பத்திரிகையில் ஒரு கட்டுரை.  மக்கள் கூட்டம்கூட்டமாக ஏடிஎம் முன்னால் சாகிறார்கள், மாபெரும் கலவரம் வெடிக்கப்போகிறது என்று.  என்னதான் உத்தேசிக்கிறார்கள்?” இப்போதைய பணப் பிரச்சினை பற்றி ஜெயமோகன் கட்டுரையில் என்னை அசத்திய வரிகள் இவை!  இன்னமும் ஜெயமோகன் அவருடைய 25 வயதில் எழுதிய வேகத்தில் எழுதுவது கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.  தம்பிக்கு முதுமையே வராது … Read more

கனவு, கேப்பச்சினோ, கொஞ்சம் சாட்டிங்…

தஸ்லீமா நஸ்ரினின் சமீபத்திய நாவலுக்கு எக்ஸைல் என்று பெயர் வைத்துத் தொலைத்திருப்பதால் என்னுடைய எக்ஸைல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு வேறு தலைப்பு வைக்க வேண்டியிருக்கிறது.  மார்ஜினல் மேன் என்ற தலைப்பை நண்பர் சொன்னார்.  எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.   ரொம்ப நல்ல தலைப்பு என்றார்கள் தருணும் தருணின் மனைவி கீதனும்.  ஆனால் ஒரே ஒருத்தருக்குப் பிடிக்கவில்லை.  மேலே உள்ள தலைப்பில் உள்ள போதை இதில் இல்லை என்கிறார்.  Line of Mercy என்ற விரைவில் வர இருக்கும் ஒரு … Read more