தமிழ் எழுத்தாளன்

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற என்னுடைய சிறுகதையில் எழுத்தாளர் என்ற வார்த்தை ஒழுத்தாளன் என்றே குறிக்கப்பட்டிருக்கும்.  அதற்குக் காரணம், இந்த சூழல் மீது நான் கொண்டுள்ள அதிருப்தியும் வெறுப்பும்.   ஏன் அதிருப்தி என்பதற்கு பின்வரும் நேர்காணலைப் படித்துப் பாருங்கள்.  எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா குமுதம் லைஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது.  சுஜாதாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டி வந்த போது வீட்டில் பணம் இல்லை.  வசித்துக் … Read more

கிருஷ்ணா என்ற கிளியும் கிருஷ்ணா எழுதிய கிளியும்… பிரபு காளிதாஸ்

பிரபு காளிதாஸ் முகநூலில் எழுதியது: விகடனில் மனுஷ்ய புத்திரன் எழுதிய “கிளிக்காவியம்” படித்தேன். கிளி பற்றிய கவிதை என்பதால் முதலில் படிக்காமல் விட்டுவிடலாம் என்று இருந்தேன். காரணம், செல்லப்பிராணிகள் கதைகள் பூராவும் துயரத்தில் தான் முடியும் என்பது மாற்றமுடியாத விதி. நான் வளர்த்த “கிருஷ்ணா” எனும் கிளியை மறுபடி இந்த கவிதை கிளறிவிட்டால் என்ன செய்வது என்று பயம். அப்புறம் தைரியம் வரவழைத்துப் படித்து விட்டேன். பயங்கரமான கவிதை. அது என் கிருஷ்ணா பற்றிய நினைவுகளைக் கிளறிவிட்டது. … Read more

T.R. Vivek

என்னுடைய சிந்தனையின் போக்கிலேயே மாற்றம் உண்டாக்குகின்ற அளவுக்கு ஆளுமை கொண்ட நண்பர் ட்டி.ஆர். விவேக்.  ஆங்கிலப் பத்திரிகையாளர்.  என் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளியாவதற்கு முழுமுதல் காரண கர்த்தா இவர்தான்.  நேரில் பார்த்துப் பேசியதில்லை.  பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும், ஆங்கிலத்தில் இயங்கும் பல தமிழர்கள் என்னையும் என்னுடைய எழுத்தையும் மிகக் கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் எழுதுவதைப் பார்க்கும் போது இவர்களுக்கு நம் மீது என்ன கோபம் என்று நான் நினைப்பதுண்டு.  அவர்களுடைய எழுத்தில் என் மீதான அருவருப்பு மட்டுமே அதில் … Read more

அந்நியன் – 2

முன்பு போல் இருந்திருந்தால் அயோக்கியத்தனம், கயவாளித்தனம் என்றெல்லாம் எழுதியிருப்பேன்.  இப்போது எல்லாவற்றையும் கடவுளிடம் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறேன்.  என்றைக்கு இருந்தாலும் திலீப்குமார் செய்த அதர்மமான காரியத்துக்கு அவர் இறைவனிடம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.  ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் பாலமாக விளங்கும் தமிழ் இலக்கிய தாதாக்களில் ஒருவரான திலீப்குமார் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியான The Tamil Story என்ற தலையணை சைஸ் தொகுப்பில் சி.என். அண்ணாதுரையின் சிறுகதையைக் கூட தேர்வு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.  சி.என். அண்ணாதுரையை விட நான் … Read more

இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுத் தேர்வு மிகவும் முட்டாள்தனமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பாப் டைலன் ஒரு மாபெரும் கலைஞர்; ஆனால் அவர் இலக்கியவாதி இல்லையே? Arts என்று ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு அதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.  இனிமேல் அமெரிக்க ஜனாதிபதியின் உரையைத் தயாரிப்பவருக்குக் கூட இலக்கியத்துக்கான நோபல் கொடுப்பார்கள் போலிருக்கிறது.  அதேபோல், டரண்டினோ படத்துக்கு வசனம் எழுதுபவருக்கும் இலக்கியத்துக்கான நோபல் கொடுக்க ஆரம்பிக்கலாம்.  சென்னையில் கலைமாமணி விருது கமிட்டியைச் சேர்ந்த யாரோ ஒரு ஆள் நோபல் … Read more

அந்நியன்

இரண்டு தினங்களுக்கு முன்பு மனுஷ்ய புத்திரன் பேசினார்.  அதற்குப் பதிலாக அவரிடம் இன்று காலை பேசினேன்.  என்னுடைய புத்தகங்களை வெளியிட வேண்டும்.  சென்ற ஆண்டு புத்தக விழாவில் உயிர்மையிலிருந்து மூன்று புத்தகங்கள் வந்தன.  சாருஆன்லைனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் எழுதி வரும் எதுவும் இன்னும் தொகுக்கப்படவில்லை.  தொகுத்தால் ஒரு டஜன் புத்தகங்கள் வரும்.  எனக்கு அதில் ஆர்வம் இல்லை.  முக்கியமான பிரச்சினை, இங்கே பிழை திருத்தம் செய்ய ஆட்கள் இல்லை.  நானே பிழை திருத்தம் செய்ய … Read more