shruti.tv

அடியேன் கலந்துகொண்ட ‘அழகியபெரியவன் கதைகள்’ விமர்சனக் கூட்டத்தையும், ‘அசோகமித்திரன் கதைகள்’ விமர்சனக் கூட்டத்தையும் வெகு நேர்த்தியாக, துல்லியமான ஒலி/ஒளிப்பதிவுடன் ஸ்ருதி டிவி நிறுவனத்தார் படம்பிடித்து அவர்கள் யூட்யூப் சானலில் வெளியிட்டுள்ளனர். தரம் உயர்தரம். சினிமா நிகழ்வுகளை படம்பிடிக்க, செய்தி வெளியிட ஆயிரம்பேர் உள்ளனர். இலக்கிய நிகழ்வுகளை மிக நேர்த்தியாக உயர்தரத்தில் ஸ்ருதி டிவி மட்டுமே படம்பிடிக்கிறது. www.shruti.tv என்ற இவர்கள் இணையதளத்தில் சினிமா, இலக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. உங்களிடம் என் வேண்டுகோள்: நாமும் நமது நண்பர்களும் இவர்களது யூடியூப் … Read more

லா.ச.ரா. நூற்றாண்டு விழா

வரும் 30 /10/2015 மாலை 6 மணி அளவில் ரஷ்ய கலாச்சார மையத்தில்  லா.ச.ரா-வின் நூற்றாண்டு விழா மற்றும் புத்தக வெளியீடு.  சிறப்புரை அடியேன்.  அவசியம் கலந்து கொள்ளவும்.      

தி.ஜா.வை வாசிப்போம்… (1)

தினமணி இணைய இதழில் இந்த மாதம் தி. ஜானகிராமன்.  முதல் பகுதி நேற்று வெளியாகியுள்ளது. http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/10/25/%E0%AE%A4%E0%AE%BF.-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-1921-1982/article3095218.ece

இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும்…

(இந்தச் சிறுகதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.  யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல.  அப்படித் தெரிந்தால் அது தற்செயலானதே!) அசோகமித்திரன் ஏராளமாக எழுதியிருக்கிறார்.  அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதுகிறார் அல்லவா? அவ்வளவையும் படிப்பது கொஞ்சம் சிரமம்தான்.  ஒருநாள் வாசு வீட்டுக்குப் போன போது இன்ஸ்பெக்டர் செண்பகராமன் என்ற குறுநாவல் தொகுப்பைப் பார்த்து விட்டு ஆர்வமாக எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன்.  அவ்வளவுதான்.  இரும்பும் காந்தமும் போல ஒட்டிக் கொண்டது.  முடித்து விட்டே கொடுங்கள் என்றான் வாசு.  நாகேஸ்வர … Read more

வெங்கட் சாமிநாதன்: பனுவல் சந்திப்பு : அசோகமித்திரன் படைப்புகள்

பொதுவாக மனிதர்களிடம் காணப்படும் அடிப்படை உணர்வுகள் சில என்னிடம் இல்லை என்பதை என் வாழ்நாளில் ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறேன்.  உருகி உருகி நான் அன்பு செலுத்திக் கொண்டாடிய மகள் பிரிந்தாள்.  ஒரு குட் பை சொன்னதோடு முடிந்தது.  பத்து ஆண்டுகள் என் மீது உயிரையே வைத்திருந்த ஒரு பெண் “உன்னைப் பிரிகிறேன்” என்றாள்.  ஸலூட்.  நைனா காலைல இறந்துட்டாங்கண்ணெ… என்றான் தம்பி.  ”அப்படியா, ஒரு பத்திரிகைக்கு (உயிர்மை) அவசரமா கட்டுரை எழுதிக்கிட்டிருக்கேன்… முடிஞ்சதும் கிளம்பி வந்துர்றேன்.  அதுக்குள்ள … Read more