ஜனவரி 9, புத்தக வெளியீட்டு விழா

ஜனவரி 9, சனிக்கிழமை அன்று மாலை ஆறரை மணிக்கு நடக்க இருக்கும் என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில்  எடிட்டர் லெனினும், மனுஷ்ய புத்திரனும், சமஸ்-உம் கலந்து கொண்டு பேசுவதற்கு சம்மதித்திருக்கிறார்கள்.  எடிட்டர் லெனின் என்னுடைய துக்ளக் கட்டுரைகள் பற்றியும், சமஸ் அந்திமழையில் வெளிவந்த அறம் பொருள் இன்பம் என்ற கேள்வி பதில் தொகுப்பு பற்றியும், மனுஷ்ய புத்திரன் எக்ஸைல் பற்றியும் பேச இசைந்துள்ளார்கள்.  என்னைத் திட்டிக் கொண்டிருக்கும் அன்பர்கள் உடனடியாக இந்த மூவரையும் தொடர்பு கொண்டு என்னைப் … Read more

ஊடக வன்முறை

நடிகர் சங்கத் தேர்தலுக்கு மறுநாள் பேப்பர் வாங்கக் கடைக்குப் போகும் போது தி இந்துவில் பாண்டவர் அணி வெற்றி பற்றிய செய்தியை (தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சரத்குமார் அணி தோற்று விடும் என்று எனக்குத் தெரியும்) தலைப்புச் செய்தியாகவோ முதல் பக்கத்திலோ போட்டிருந்தால் அன்றோடு தி இந்து படிப்பதை நிறுத்தி விட வேண்டும் என்ற யோசனையில்தான் போனேன்.  நல்லவேளையாக அந்தச் செய்தி முதல் பக்கத்தில் இல்லை.  எங்கேயோ எட்டாம் பக்க மூலையில் வந்திருந்தது.  தி இந்து என் … Read more

வெள்ளைத் திமிர்

பெங்களூரில் ஒரு ஆஸ்திரேலிய இளைஞன் தன் காலில் எல்லம்மனின் படத்தைப் பச்சை குத்திக் கொண்டிருந்தது சிலருக்குப் பிரச்சினையாக இருந்துள்ளது.  போலீஸ் அந்த இளைஞரை அழைத்துச் சென்று மன்னிப்புக் கடிதம் பெற்றுக் கொண்டு விட்டிருக்கிறது.  அந்த இளைஞன் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்திருக்கிறார்.  இந்தச் சம்பவம் பற்றி மதச்சார்பின்மை என்பதை ஒரு நோயாகக் கொண்டு வாழும் நோயாளிகள் அலற ஆரம்பித்திருக்கிறார்கள். இது பற்றி என்னுடைய கருத்து இதுதான்:  உலகம் எங்கும் வெள்ளைத் தோல் கொண்டவர்கள் நம்மைப் போன்ற … Read more

ப்ளூ கிராஸில் விட்டு விடுங்கள்…

புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்காகப் பணம் கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன்.  ஒருவர் கூட பணம் அனுப்பவில்லை.  அது எனக்குப் பெரிய பிரச்சினையும் இல்லை.  ஆனால் ஒரு விஷயம் எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்து கொண்டே இருக்கிறது.  அந்த ஆச்சரியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.  தலைக்கு மேல் வேலை இருக்கிறது.  அந்திமழைக்கும் தினமணிக்கும் கட்டுரை அனுப்ப வேண்டும்.  அதையெல்லாம் விட்டு விட்டு இதை நெம்பிக் கொண்டிருக்கிறேன்.  காரணம், அந்த அளவுக்கு ஆச்சரியம். … Read more

மகாபாரத அணி Vs காமரூப அணி

இன்றைய தினம் அதிகாலை நான்கு மணி அளவில் ஒரு கனா.  கொடுங்கனா என்றும் சொல்லலாம்.  வேறு மாதிரியும் காணலாம்.  எப்படி அதிகாலை என்று தெரிந்ததென்றால், கனா முடிந்ததும் விழிப்பு வந்து விட்டது.  பார்த்தால் மணி நாலரை.  பலவிதமான வினோத ரசக் கலவை மனநிலையுடன் நடைப்பயிற்சி கிளம்பி விட்டேன். விஷயம் இவ்வளவுதான்.  எழுத்தாளர் சங்கத் தேர்தல் நடக்கிறது.  ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் எதிரெதிர் அணியில் நிற்கிறார்கள். மகாபாரத அணி Vs காமரூப அணி.  நாஞ்சில் நாடன், வெங்கட் சாமிநாதன், … Read more

பத்து கேள்விகள் : அழகிய சிங்கர் எடுத்த நேர்காணல்

நேற்றைய முன் தினம் அழகிய சிங்கரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன்.  அப்போது அவர் என்னிடம் பத்து கேள்விகள் கேட்டு என் பதிலை விடியோ எடுத்தார்.  அதன் இணைப்பு கீழே.  இதே போல் அசோகமித்திரனிடம் பத்து கேள்விகள் கேட்டு விடியோ எடுத்திருக்கிறார்.  அசோகமித்திரனை தி.நகரில் அவரது புதல்வர் இல்லத்தில் சந்தித்தேன்.  நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  அது ஒரு பெரிய கதை.  பிறகு சொல்கிறேன்.  இப்போதைக்கு நேர்காணல்.