இந்திய எழுத்தாளனும் உலகமயமாக்கலும்! – தி இந்து கட்டுரை

புகைப்படம்: பிரபு காளிதாஸ் ஐரோப்பியர்கள் 1945-இல் ஒன்றைப் புரிந்துகொண்டார்கள். தேசியம் பட்டினி போடும்; செல்வத்தையெல்லாம் ராணுவத்துக்குச் செலவிட்டுவிட்டு நாம் உருளைக் கிழங்கைத் தின்று வாழ வேண்டுமா என யோசித்தார்கள். விளைவு, ஐரோப்பிய ஒன்றியமாக இணைந்தார்கள். விசா போன்ற அனுமதிச் சீட்டுகள் இல்லாமலேயே ஐரோப்பா முழுவதையும் ஒருவர் சுற்றி வர முடிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஒரே பணம். ஆனால், இங்கே ஒரே நாடாக இருந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் எல்லாம் ஒன்றை ஒன்று விரோதம் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. … Read more

மாதொருபாகன் பற்றி

இன்று இரவு ஒன்பது மணிக்கு, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில், ‘நேர்படப் பேசு’ என்ற விவாத நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா கலந்துகொள்கிறார். நண்பர்கள் அவசியம் பார்க்கவும். – ஸ்ரீராம்  

பழுப்பு நிறப் பக்கங்கள்: சா. கந்தசாமி (பகுதி 1)

சாயாவனம் முதல் வாசிப்பில் ஒரு வாசகரை ஏமாற்றி விடக் கூடிய தன்மை கொண்டது. தி. ஜானகிராமனைப் போன்ற ஆடம்பரமான வர்ணனைகளையோ, லா.ச.ரா.வைப் போன்ற கவித்துவமான நீரோடைகளையோ கொண்டதல்ல சாயாவனத்தின் மொழி. மேல்பார்வைக்குக் கொஞ்சம் தட்டையாகவே தெரியும். ஆனால் அதன் உள்ளே நீறு பூத்த நெருப்பாக இருப்பது ஒரு மகத்தான தத்துவம். அதுதான் இந்த நாவலின் சிறப்பு. மேலும் படிக்க: http://bit.ly/29C3vsO