பழுப்பு நிறப் பக்கங்கள்: சுந்தர ராமசாமி (பகுதி 2)

சி.சு. செல்லப்பா, க.நா.சு.வின் அடிச்சுவட்டில் தீவிரமான இலக்கியம் ஏகப்பட்ட சிறுபத்திரிகைகளின் மூலம் வளர்ந்துகொண்டிருந்த நிலையில் சுஜாதா என்ற ஒரே மனிதரின் அசுர பலத்தினால் வெகுஜன எழுத்துக்கு மட்டுமே தமிழகத்தில் இடம் உண்டு என்ற நிலை ஏற்பட்டது. *** அகிலனுக்கு ஞான பீடம் கிடைத்தது பற்றி சு.ரா.: “அகிலன் பரிசு பெற்றதைப் பத்திரிகைச் சக்திகளும் சக கேளிக்கையாளர்களும் கொண்டாடுவது இயற்கையான காரியம். ஜிப்பா தேசிய உடையாவதை ஜேப்படித் திருடர்கள் வரவேற்பது மாதிரி இது. சீரழிந்த மதிப்பீடுகள் ஒன்று மற்றொன்றைத் … Read more

சீமானுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சகோதரர் சீமான் அவர்களுக்கு,      வணக்கம். இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதும் காணம், நீங்கள் மற்ற அரசியல்வாதிகளிலிருந்து தனித்து இருக்கிறீர்கள் என்பதுதான். முக்கியமாக எந்தப் பெரிய கட்சியுடனும் நீங்கள் சேரவில்லை. சேர்ந்திருந்தால் நாலைந்து சட்டசபை உறுப்பினர்களோடு கணக்கைத் துவக்கியிருக்கலாம். மேலும், உங்கள் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட செயல்திட்டத்தைக் கொண்டிருந்தது. ஆனால், உங்கள் கட்சியின் அடிப்படையான கொள்கையில் சில ஆபத்தான அம்சங்கள் உள்ளன. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும் என்பது அதில் … Read more

நிலவு தேயாத தேசம் – 29

இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகள் ஆகி விட்டன.  மேற்கு ஐரோப்பிய நாடுகள் அந்தப் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அந்த மனநிலையிலிருந்து விலகி வெகுதூரம் வந்து விட்டன.  இன்றைய தினம் தேசியவாதம், தேசப் பற்று போன்ற வார்த்தைகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மனித குலத்துக்கு விரோதமான கருத்துருவங்களாகக் கருதப்படுகின்றன; அவற்றை ஹிட்லரின் தேச பக்தி என்ற சித்தாந்தத்தோடு தவிர்க்க முடியாமல் சம்பந்தப்படுத்தி மனம் நடுங்குகிறார்கள்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்  நிலைமை அப்படி இல்லை.  … Read more

சென்னை புத்தகக் கண்காட்சி

தீவுத்திடலில் ஜூன் 1 முதல் 13 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. நேரம்: வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை; வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் உயிர்மை (அரங்கு எண்: 498, 499, 558, 559), கிழக்கு (அரங்கு எண்: 642 – 649), அந்திமழை (அரங்கு எண்: 208) அரங்குகளில் கிடைக்கும். – … Read more