ஸ்ரீராம்
கடல் கன்னி
கடல் கன்னி ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) தமிழில் சாரு நிவேதிதா (ஊரின் மிக அழகான பெண்) தொகுப்பில் இருந்து “இதோ பாருங்கள் டாக்டர் பால் எக்கர், இந்த வழக்கில் உங்கள் மீது நாங்கள் காட்டியிருக்கும் பொறுமைக்கு நீங்கள் இப்போது சாதிக்கும் மௌனம் எந்த விதத்திலும் நியாயமாக இல்லை. நீதிக்குத் தேவை அழுத்தமான ஆதாரங்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் ஏன் இப்படி மௌனம் சாதிக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.” பால் எக்கர் … Read more
உத்தம வில்லன்: உலகின் முதல் ஆட்டோஃபிக்ஷன் சினிமா
மீள் பிரசுரம் தினமணி இணையதளம் மே 6, 2015 உத்தம வில்லன் படத்தைப் பார்க்க ஒரு எதிர்மறையான மனநிலையுடனேயே சென்றேன். காரணம் – குணா, மகாநதி, ஆளவந்தான் போன்ற நான் விரும்பி ரசித்த கமல் படங்கள் வந்து ரொம்ப காலம் ஆகி விட்டது. ஜனரஞ்சகமாக இருந்தாலும் மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாவதி போன்ற படங்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அப்படி வந்தும் நாளாகி விட்டது. அதனால் ஏற்பட்டதுதான் அந்த எதிர்மறையான மனநிலை. ஆனால் கமல் படங்கள் … Read more
ஹிந்தி
ஹிந்தியை ஒரே மாதத்தில் கற்றுக் கொண்டு விடலாம். அந்த மொழி இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் பேசப்படுகிறது என்பதைத் தவிர அந்த மொழிக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் இல்லை. ராஜாஜியிடம் நேரு கேட்டார், ஏன் நீங்கள் ஆங்கிலத்தை ஏற்கிறீர்கள், இந்தியை எதிர்க்கிறீர்கள் என்று. ராஜாஜியின் பதில், ஆங்கிலேயர் எம்மை வென்றார்கள், நீங்கள் வெல்லவில்லை. இந்தி மொழித் திணிப்பு என்பது வட இந்தியரின் இனவாதம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. பெரும்பான்மையான வட இந்தியர் இனவெறியர் என்பது … Read more
ரஜினி: தன் பிம்பத்தின் சுமை
மீள் பிரசுரம் தமிழ் இந்து டிசம்பர் 12, 2013 ரஜினி பிறந்த நாளில் ரஜினிபற்றி ஒரு மீள்பார்வையில் நாம் யோசிக்கலாம். மற்ற நடிகர்களையும் ரஜினியையும் வேறுபடுத்திக் காட்டும் தன்மை என்னவென்றால், ரஜினியிடம் இருக்கும் ஒரு மின்காந்த வசீகரம். அதனால்தான் ஒரு சிறிய குழந்தைகூட ரஜினியைப் பார்த்தால் குதூகலம் அடைகிறது. உலக அளவில் இதே போன்ற வசீகரத்தைக் கொண்டவராக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவரைப் பார்த்த மாத்திரத்தில் ரசிகர்கள் பரவசம் அடைந்தார்கள். ஆனந்த மிகுதியில் கண்ணீர் விட்டார்கள். அப்பேர்ப்பட்ட … Read more
ஆட்டிப்படைத்த மாயம்: சில்க் ஸ்மிதா
மீள் பிரசுரம் தி சண்டே இந்தியன் அக்டோபர் 30, 2011 பாலியல் தொழிலாளியாக இருந்து, பின்னர் எழுத்தாளராக மாறிய நளினி ஜமீலா ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார். அவருடைய சுயசரிதை நூல் கேரளத்தில் பிரபலமான பிறகு அவருடைய நேர்காணல்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் வெளிவரத் தொடங்கின. அப்போது அவருக்கு தினமும் நூற்றுக்கணக்கான காதல் கடிதங்கள் வர ஆரம்பித்தனவாம். காதல் என்றால் எப்படிப்பட்ட காதல்? “உங்களோடு ஒரே ஒருமுறை செக்ஸ் அனுபவிக்க வேண்டும்.” இதைப் பற்றி சிரித்துக் கொண்டே குறிப்பிட்ட ஜமீலா, … Read more