சமஸ்

17.4.2017 சில தினங்களுக்கு முன்பு மனுஷ்ய புத்திரன் தி இந்துவில் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தீர்களா? படிக்கவில்லையெனில் உடனே இங்கே படித்து விடுங்கள். நான் கடந்த பல ஆண்டுகளாகப் புலம்பிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை அவரும் அனுபவித்து எழுதியிருக்கிறார். விஷயம் இதுதான். தில்லியில் நடந்த ஒரு கவிதைக் கருத்தரங்குக்குச் சென்றிருக்கிறார். இந்திய மொழிகளிலிருந்து பல கவிஞர்கள். கடைசியில் பார்த்தால் இவர் கவிதைகள் மட்டுமே வேறு ஏதோ ஒரு தளத்தில் இருந்திருக்கின்றன. அது மட்டும் அல்ல; அந்தக் கவிஞர்கள் அத்தனை … Read more

ஃப்ரான்ஸும் நானும் – 2

மின்னம்பலத்தில் நான் எழுதி வரும் நாடோடியின் நாட்குறிப்புகள் தொடரிலேயே ஒரு குட்டித் தொடராக ஃப்ரான்ஸும் நானும் என்று கடந்த இரண்டு வாரமாக வருகிறது. அதற்காகத் திரும்பவும் எனக்குப் பிடித்த ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களைப் படித்தேன். இந்த வேலையையெல்லாம் ஃப்ரெஞ்ச் தொடர்பு உள்ள மற்றவர்கள் செய்திருக்க வேண்டும். அவர்கள் செய்யாததால் நானே செய்கிறேன். தமிழில்தான் நம்முடைய எழுத்துக்கு நாமே விளக்கவுரை, ஆய்வுரை, விமர்சனம், மதிப்புரை, பின்னட்டை விளக்கம் எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது… https://www.minnambalam.com/k/2017/04/17/1492367413

கையெழுத்து : பா. ராகவன்

14.04.2017 என் கையெழுத்து அச்சுக் கோர்த்தது போல் இருக்கும், முன்பு.  இப்போது கொஞ்சம் மெருகு குறைந்துள்ளது.  கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்பார்கள்.  அதேபோல் கையெழுத்து மோசமாக இருந்தால் தலையெழுத்து ஜோராக இருக்கும்.  காந்தி, ஜெயமோகன் இருவரின் கிறுக்கல் கையெழுத்து ஞாபகம் வருகிறது. பா. ராகவன் கல்கியில் பணியாற்றிய சமயத்திலிருந்து என் நண்பர்.  சமீபத்தில் எக்ஸைல் படிக்க ஆரம்பித்தார்.  எப்படிப் போகிறது என்று மெஸேஜ் கொடுத்தேன்.  ’மவன, எவன் எடுத்தாலும் வெக்கமாட்டான்’ என்று பதில் … Read more