பழுப்பு நிறப் பக்கங்கள்: ப. சிங்காரம் (பகுதி 2)

புயலிலே ஒரு தோணி நாவல் முழுவதும் கடவுள், மதம், தர்மம், மொழி, நிலம், தாய்மை, சாதி, கலாச்சாரம், மரபு, பண்பாடு, தேசம் என்று எல்லாவற்றையும் பகடி செய்கிறார். அவருடைய பகடியிலிருந்து எதுவுமே தப்பவில்லை. ஒருவேளை இது கூட தமிழ் இலக்கிய முன்னோடிகள் சிங்காரம் பற்றிப் பேசாததற்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. சிங்காரத்தை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துவது என்னவென்றால், அவர் எழுத்து வெறும் பகடி மட்டும் அல்ல; Raymond Federmen-ன் மொழியில் சொல்வதானால், gimmicks, playfulness, narcissism, … Read more

மதுரை புத்தகக் கண்காட்சி

மதுரை புத்தகக் கண்காட்சி இன்று முதல் செப்டெம்பர் 12 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 112, 113) மற்றும் உயிர்மை (அரங்கு எண்: 144, 145) அரங்குகளில் கிடைக்கும். அந்திமழை வெளியீடான ‘அறம் பொருள் இன்பம்’, நற்றிணை புக் செண்டர், டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் மாயா புக் செண்டர் ஆகிய அரங்குகளில் கிடைக்கும். இடம்: தமுக்கம் மைதானம், மதுரை. நேரம்: காலை 11 மணி முதல் மாலை 9 மணி … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: ப. சிங்காரம் (பகுதி 1)

சிங்காரம் சொல்கிறார்: “இதுவரை நான் ஒரு நல்ல தமிழ் நாவலைப் படித்ததில்லை. நான் படித்ததெல்லாம் ஆங்கில நாவல்கள்தாம். இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்தவுடனேயே இந்தியாவுடனான கடல் போக்குவரத்து நின்று போனது. தமிழ்நாட்டிலிருந்து ஒரு பத்திரிகை கூட அங்கே வரவில்லை. நான் படித்தது பூராவும் பினாங் பொது நூலகத்தில்தான். ஹெமிங்வே, டால்ஸ்டாய், ஃபாக்னர், செக்காவ், தாஸ்தாவெஸ்கி, மற்றும் ஏகப்பட்ட பேர்.” ஆக, சிங்காரத்துக்கு உலக மொழிகளில் உள்ள நவீன இலக்கியப் பரிச்சயம் கிடைத்துவிட்டது. ஆனால் மொழி? நவீனத் தமிழ் … Read more