பழுப்பு நிறப் பக்கங்கள்: ந. முத்துசாமி (பகுதி 4)

தமிழில் நாடகத்தின் நிலை எப்படி இருக்கிறது என்று நினைத்தால் சகிக்கவொண்ணாத் துயரம் கவிகிறது. முதலில் இங்கே நாடகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் முதல்முதலாக நவீன நாடகத்தை ஒரு கலையாக அறிமுகப்படுத்தியவர் ந. முத்துசாமி. ந. முத்துசாமியையும் நவீன நாடகத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் உடனடியாகச் செய்ய வேண்டியது அவரது நாடகங்களைப் படிப்பதாகும். மேலும் படிக்க: தினமணி இணையதளம்

ராமன் ராகவ் திரைப்படம் திரையிடல் & கலந்துரையாடல்

ராமன் ராகவ் திரைப்படம் திரையிடல் & கலந்துரையாடல், 21-08-2016, ஞாயிறு மாலை 6.00 மணிக்கு. இடம்: பிரசாத் லேப், சாலிகிராமம், ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சிறப்பு அழைப்பாளர்: இயக்குனர் அனுராக் காஷ்யப். நண்பர்களே இயக்குனரை அனுராக் காஷ்யப் தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் நிகழ்விற்காக சென்னை வருகிறார். சனிக்கிழமை விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. ஞாயிறு மாலை, அனுராக் காஷ்யபின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான … Read more

கோவை புத்தகக் கண்காட்சி

கோவை புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஆகஸ்ட் 28 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்- 173, 174) மற்றும் உயிர்மை (அரங்கு எண்- 80) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்: கொடிஸியா வளாகம், கோவை – ஸ்ரீராம்  

தமிழ் ஸ்டுடியோவின் B. லெனின் விருது வழங்கும் விழா – 2016

  தமிழ் ஸ்டுடியோவின் B. லெனின் விருது 2016 பெறுபவர்: தீபா தன்ராஜ் 20-08-2016, சனிக்கிழமை, மாலை 6.30 மணிக்கு. பிரசாத் லேப், சாலிகிராமம், ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வழக்கமாக நிகழ்வுகள் நடைபெறும் பிரசாத் பிரிவியூ திரையரங்கம் அல்ல, பிரிவியூ திரையரங்கிற்கு அடுத்துள்ள பிரசாத் ரெக்கார்டிங் திரையரங்கில்) தொடர்புக்கு: 9840698236 சிறப்பு அழைப்பாளர்கள்: இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆய்வாளர் வ. கீதா சாரு நிவேதிதா இயக்குனர் லீனா … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – ந. முத்துசாமி (பகுதி 3)

நான் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன், எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதில்லை என்று. உதாரணம், ந. முத்துசாமி. இன்றைய தினம் உலக நாடக அரங்கில் இப்ராஹீம் அல்காஷி ஒரு legend-ஆகக் கருதப்படுபவர். ந. முத்துசாமியின் பெயர் அப்படித் தெரிந்திருக்கவில்லை என்றாலும் ரத்தன் திய்யம் அளவுக்காவது உலக அளவில் தெரிந்திருக்க வேண்டாமா? ரத்தன் திய்யத்தைத் தெரியாத ஒரு மணிப்பூர்க்காரரை நாம் பார்க்க முடியாது. இந்திய நாடகம் என்றால் அதில் முதல் ஐந்து பேரில் வரும் பெயர் ரத்தம் திய்யம். … Read more