தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் அவலம்…

“இன்று கனமான இலக்கிய ஆசிரியர்களும் கூட பொது ஜனங்களிடம் தங்கள் பெயர்களை அறிமுகப்படுத்துவதற்கு இந்தப் பத்திரிகைகளைத்தான் நம்பியிருக்க வேண்டியதாக இருக்கிறது. வேறு விதமாகப் பொது ஜனத்தின் சிறு பகுதியைக் கூட கவனத்தைக் கவர சாதனம் எதுவும் இல்லை. பலதரப்பட்ட வழிகளில், ஓரளவு கௌரதை குறைவான வழியில் கூடப் பத்திரிகைகளில் தங்கள் பெயர்கள் வந்தாக வேண்டுமே என்பதற்காக நல்ல இலக்கியாசிரியர்களும் கூடக் கட்டுப்பட்டு, கட்டுப்படுத்திக் கொண்டு எழுத வேண்டியதாக இருக்கிறது. எழுதுவதை இலக்கியமாகக் கவனிக்க மறுக்கிற, அலட்சிய புத்தியுள்ள … Read more

எதற்காக எழுதுகிறேன்?

எனக்கே எனக்காக எழுதுவதைப் பற்றி என்ன சொல்ல முடியும்?  விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது?  எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது.  எழுதுகிறேன்.  அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது.  காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது.  காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப் போதல், வேதனை – எல்லாம் அதில் இருக்கின்றன.  இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியைக் காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.  கண்ய … Read more

பிச்சை, உதவி, தட்சிணை, கட்டணம்… எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்…

http://www.jeyamohan.in/74673#.Vf42qtKqqko மீண்டும் உதவி கேட்டு.  பண உதவி கேட்டால் ஏன் எல்லோரும் மிரண்டு போய் பதற்றம் அடைகிறார்கள் என்று இன்னமுமே எனக்குப் புரியவில்லை.  ஒரே காரணம்தான் இருக்க முடியும்.  ஒருவரின் ஆளுமையைப் புரிந்து கொள்வதில், மதிப்பிடுவதில், ஏற்பதில் அல்லது மறுப்பதில் பணம் ஒன்றையே அளவுகோலாக வைக்கிறார்கள்.  என்னைத் திட்டி எழுதப்படும் அத்தனை எழுத்துமே நான் வாசகர்களிடம் பணம் கேட்கிறேன் என்ற ஒரே விஷயத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.  ஆக, ஒரு எழுத்தாளனை மதிப்பிட, ஏற்க, வெறுத்து ஒதுக்க இந்தப் … Read more

க.நா.சு. the great! – 2

இந்தக் கட்டுரையை அவசியம் படியுங்கள்.  இதைப் படித்தால்தான் அடுத்து நான் எழுதிக் கொண்டிருக்கும் இன்னொரு கட்டுரையை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.  அந்தக் கட்டுரையை இன்னும் இரண்டொரு மணி நேரத்தில் பதிவேற்றுவேன். http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/09/20/%E0%AE%95.%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%9A%E0%AF%81.-1912-%E2%80%93-1988—%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/article3036348.ece

க.நா.சு. the great!

தினமணி பழுப்பு நிறப் பக்கங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கவனிப்பும் பாராட்டுகளும் வந்து கொண்டிருக்கின்றன.  தொடர்ந்து செயல்படுவதற்கான ஊட்டச் சத்து மாதிரி இந்தப் பாராட்டு.  பாராட்டு என்பதை விட எல்லோரும் ஆர்வமுடன் படிக்கிறார்கள் என்பதே என்னை உற்சாகப்படுத்தும் முதல் விஷயம்.  அதிலும் தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைக்கு ஏகப்பட்ட எதிர்வினைகள்.  என் தவப்புதல்வன் சாம் எழுதியிருக்கிறான், யோவ், நீர் இப்போது படித்து விட்டதால் இங்கே ஒருத்தரும் படிக்கலைன்னு அர்த்தமாயிடுமா, லக்ஷ்மி சரவணகுமார் ஏற்கனவே எழுதியிருக்கார்யா, என்று. … Read more

ராஜேஷ், அராத்து, கணேஷ் அன்பு, பிரபு காளிதாஸ்…

மேலே சொன்ன பட்டியலில் செல்வகுமாரையும் சேர்க்க வேண்டும்.  ஆனால் அவர் எழுதியதை இன்னும் தொகுக்காமல் இருக்கிறார்.  பிரபு காளிதாஸ் பற்றி நான் எழுதியதற்கு அராத்து முகநூலில் எழுதியதும் அடியேன் அதற்கு எழுதிய பதிலும்… கொஞ்சூண்டு வெளில தெரியிர மாதிரி ஆளாயிட்டாலே மூளையைச் சுத்தி வேலி போட்டுப்பாங்க ! பெரிய பாறாங்கல்லை தூக்கி தலைல வச்சிகிட்ட மாதிரியே திரிவாங்க. ஐகான் ஆயிட்டா கேக்கவே வேணாம்.அக்குள்ள கையை வுட்டு கிச்சி கிச்சாங்க் பண்ணா கூட , 45 டிகிரி தலையை … Read more