ஒரு முக்கியமான இலக்கியக் கூட்டம்

விருட்சம் அழகிய சிங்கரின் பின்வரும் அறிவிப்பைக் காணவும்.  அவசியம் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும்.  பொதுவாக நான் பேசும் கூட்டங்களில் நம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் ஒருவர் கூட கலந்து கொள்வதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கவனித்து வருகிறேன். டாக்டர் ஸ்ரீராம் விதிவிலக்கு; தவிர சென்னை புத்தக விழாவில் நான் பேசிய போது கருப்பசாமி இருந்தார்.   இந்த ஆகஸ்ட் 15 கூட்டத்தையும் நீங்கள் முழுமையாகப் புறக்கணித்தால் வாசகர் வட்டம் என்று சொல்லிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.  … Read more

வாசகர் சந்திப்பு

சுமார் ஒரு மாதம் முன்பு அந்தியூருக்கு அருகில் உள்ள ஈரட்டி என்ற மலை வாசஸ்தலத்தில் இருக்கும் பங்களாவில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த  நண்பர்களைச் சந்தித்தேன்.  திட்டமிடாத சந்திப்பு என்பதால் அதிக நண்பர்களை சந்திக்க முடியவில்லை.  இப்போது திட்டமிட்டு ஒரு சந்திப்பு.  வரும் சனிக்கிழமை மாலை.  நான்கு மணியிலிருந்து நள்ளிரவு வரை பேசலாம்.  Transgressive fiction பற்றி உரையாடலாம், விவாதிக்கலாம்  என்று எண்ணுகிறேன்.   இடம்:   எழுமாத்தூர் அருகே மண்கரடு லிங்காத்தாள் குட்டை செல்லும் வழியில் … Read more

எம்.வி. வெங்கட்ராம் – பகுதி (3)

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு மாத்யமம் பத்திரிகையில் நான் எழுதி வந்த கோணல் பக்கங்கள் என்ற தொடர் கேரளத்தில் மிகவும் பிரபலமான ஒரு பத்தி.  குறிப்பாக வட கேரளத்தில்.  மாத்யமம் பத்திரிகை வார இதழ்.  நான் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எழுதியதாக ஞாபகம்.  நான்கு ஆண்டுகள் எழுதினேன். அது ஒரு இஸ்லாமியக் கலாச்சார அமைப்பால் நடத்தப்படுவது.  அதில் நான் எழுதியது பற்றி மலையாள எழுத்துலகில் என் மீது மதரீதியான முத்திரையும் குத்தப்பட்டது. அது பற்றி நான் கவலைப்பட்டது இல்லை. … Read more

தனிமையின் நிழலில்…

சமீபத்தில் எனக்கு வந்த ஒரு முக்கியமான கடிதத்தைப் பற்றி வாசகர்களோடு என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். நண்பர் எனக்குப் பிடித்த எழுத்தாளர். இளைஞர். இது மிகவும் அபூர்வமாகவே நிகழ்வது. வாழும் எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்தவர்கள் என்றால் அவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இவரோ மிகவும் இளைஞர். வெகுஜனரீதியாக மக்களின் சிந்தனை ஓட்டத்தில் சில பல சீரிய மாற்றங்களைச் செய்து விடக் கூடிய இடத்தில் இருப்பவர். செய்து கொண்டும் இருக்கிறார். ஆனால் இவரை ஐந்து பத்து நண்பர்களைத் … Read more

எழுதி விடாதீர்கள்…

மற்ற எழுத்தாளர்களுக்கு எப்படியோ, எனக்கு ஒரு விசேஷமான அனுபவம் கிடைத்தபடி இருக்கிறது. என்னைச் சந்திக்கும் எல்லோருமே ஒரு விஷயத்தைத் தவறாமல் என்னிடம் சொல்கிறார்கள்.  “என்னைச் சந்தித்தது பற்றி எழுதி விடாதீர்கள்.”  ஒருத்தர் சொன்னால் பரவாயில்லை.  சந்திக்கும் அத்தனை பேருமே சொல்கிறார்கள் என்றால் இதில் ஏதோ சூட்சுமம் இருக்க வேண்டும்.  என்ன என்றுதான் தெரியவில்லை. ஆனால் சென்ற வாரம் சந்தித்த நண்பர் சொன்ன போது காரணம் கேட்டேன்.   ”நீங்கள் குறிப்பிட்டு எழுதும் அளவுக்கு நான் பெரிய ஆள் … Read more

மண்

கிடைத்தால் வரம்; கிடைக்கா விட்டால் சாபம்.  தஞ்சாவூர் மாவட்டத்து மண்ணில் பிறந்தவர்களால் மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடியும். 62 வயதிலும், ஓடினால் நெஞ்சு வலி என்ற நிலையிலும் பித்தோ இது எனத் தோன்றும் காமம் பொங்கிப் பெருகும் தேகம் தஞ்சை மண்ணுக்கே உரியது. அதிலும் பனிரண்டு மணி நேரப் படிப்பில் தேகம் சுழித்து நுரைக்கிறது.  மதுவையும் விட்ட பிறகு உணர்வுகளை மழுங்க அடிக்க எதுவும் இல்லாத நிலையில்… உணர்வுகள் கூர்மை பெற்று ஓங்கிப் பெருகுகின்றன.  சிருஷ்டிகரமான … Read more