யாருக்காக அழுதான்?

நான் சாருஆன்லைனில் வெளியிடும் நிகழ்ச்சிகளுக்கு வாசகர் வட்டத்திலிருந்து ஒருவர் கூட வருவதில்லை என்பதைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  டிஸ்கவரி பேலஸில் பாலு மகேந்திரா பற்றிய என் பேச்சைக் கேட்கவும் யாரும் வாசகர் வட்டத்திலிருந்து வரவில்லை.  நன்றி.  இப்போது தமிழ் ஸ்டுடியோ அருண் பின்வரும் தகவலை அனுப்பியுள்ளார்.  நான் செல்ல இருக்கிறேன்.  வழக்கம்போல் நீங்கள் யாரும் வர வேண்டாம்.  சனிக்கிழமை வீட்டு வேலை இருக்கும்.  கஷ்டப்படாதீர்கள்.  இருந்தாலும் இத்தகவலை வெளியிடாவிட்டால் அருண் வருத்தப்படுவார் என்பதால் இங்கே வெளியிடுகிறேன்… ஒரு … Read more

புதிய இணைய இதழ் : கூடு

தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு  படிக்க: http://thamizhstudio.com/Koodu/index.htm நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழான கூடு ஏப்ரல் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. முன்னர் இணையதளமாக செயல்பட்டுக்கொண்டிருந்த கூடு இப்போது மாத இதழாக மாற்றப்பட்டுள்ளது. கதைசொல்லி, உள்ளிட்ட பகுதிகள் இனி தொடர்ந்து வெளியாகும். ஏப்ரல் மாத கூடு இணைய இதழ் முழுக்க முழுக்க சென்னை புத்தகக் காட்சி சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நண்பர்கள் படித்துவிட்டு அவசியம் தங்கள் கருத்துகளை பகிருந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். கூடு ஏப்ரல் … Read more

புத்தக விழா

ராயப்பேட்டை YMCA மைதானத்தில் ஏப்ரல் 13 முதல் 23 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. புதிய எக்ஸைல், ராஸ லீலா, ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் -1, 2, 3 ஆகியவை கிழக்கு அரங்கில் கிடைக்கும். அரங்கு எண் – 123, 124. சாருவின் மற்ற புத்தகங்கள் உயிர்மையில் கிடைக்கும். அரங்கு எண் – 52. நேரம்: வார நாட்களில் மதியம் 2 முதல் இரவு 9 வரை. வார இறுதிகளில் காலை 11 முதல் இரவு … Read more

பயணம்

கடைசியாக வீசா வந்து விட்டது.  ஒரு மாத காலம் தங்கலாம்.  ஆனால் ஒரு வாரம் தங்குவதற்குத்தான் நிதி நிலைமை அனுமதிக்கிறது.  இப்போது எனக்கு இருக்கும் கால நெருக்கடியில் இந்த ஐரோப்பியப் பயணத்தையே ஆறு மாத காலம் ஒத்திப் போட்டு விடலாம்; ஆனால் இது மூன்று மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது.  எந்த நாடு, எப்போது கிளம்புகிறேன் என்பதையெல்லாம் எழுதி வைக்காதே என்று அவந்திகா உத்தரவு போட்டிருப்பதால் அந்த விபரங்களை எழுத முடியவில்லை.  எழுதவில்லை என்று என்னிடம் பொய் சொல்லி … Read more

விதை – இயற்கை அங்காடி

இப்போது ரசாயன உரம் போடாத, பூச்சிக் கொல்லி மருந்து போடாத உணவுப் பொருட்களை, தானியங்களை, அரிசியை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகி இருக்கிறது.  அதற்கேற்றாற்போல் கடைகள் அதிகம் இல்லை.  அந்தக் குறையைப் போக்க இப்போது ஒரு அங்காடி.  விதை இயற்கை அங்காடி.  வாங்கிப் பார்த்தேன்.  நல்ல தரம்.  நீங்களும் பயன்படுத்தலாம். விதை இயற்கை அங்காடியின் பொருட்களை இப்போது இணையத்தின் மூலம் பெறலாம். கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி, தேவையான பிரிவைத் தேர்வு செய்து, பொருட்களைத் … Read more