யாருக்காக அழுதான்?

நான் சாருஆன்லைனில் வெளியிடும் நிகழ்ச்சிகளுக்கு வாசகர் வட்டத்திலிருந்து ஒருவர் கூட வருவதில்லை என்பதைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  டிஸ்கவரி பேலஸில் பாலு மகேந்திரா பற்றிய என் பேச்சைக் கேட்கவும் யாரும் வாசகர் வட்டத்திலிருந்து வரவில்லை.  நன்றி.  இப்போது தமிழ் ஸ்டுடியோ அருண் பின்வரும் தகவலை அனுப்பியுள்ளார்.  நான் செல்ல இருக்கிறேன்.  வழக்கம்போல் நீங்கள் யாரும் வர வேண்டாம்.  சனிக்கிழமை வீட்டு வேலை இருக்கும்.  கஷ்டப்படாதீர்கள்.  இருந்தாலும் இத்தகவலை வெளியிடாவிட்டால் அருண் வருத்தப்படுவார் என்பதால் இங்கே வெளியிடுகிறேன்…

ஒரு முக்கியமான ஆவணப்படமும் (Invisible Wings), ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் திரைப்படமும் திரையிடல்…

18-04-2015, சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு.

இக்சா மையம், ஜீவனஜோதி அரங்கம், எழும்பூர், கன்னிமாரா நூலகம் எதிரில்.

நண்பர்களே, கேரளாவை சார்ந்த நண்பர் ஹரி ஒரு புது முயற்சியை மேற்கொண்டுள்ளார். நான் படமெடுத்தால் எப்படி மக்களிடம் கொண்டுப்போவேன் என்று சொன்னேனோ, அப்படி அவர் செய்துக்கொண்டிருக்கிறார். கொச்சினில் ஒரு சாதாரண டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வரும் விஜயன் என்பவரைப் பற்றிய பத்து நிமிடம் ஆவணப்படத்தை, ஒரு சைக்கிளில் தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரையிட்டு வருகிறார். தற்போது அவர் சென்னையில் இருக்கிறார். எனவே எதிர்வரும் சனிக்கிழமை (18-04-2015) மாலை 6 மணிக்கு எழும்பூரில் உள்ள ஜீவன ஜோதி அரங்கில் அவரது திரைப்படத்தை தமிழ் ஸ்டுடியோ சார்பாக திரையிட இருக்கிறோம். இது மாதிரியான முயற்சிக்கு பேராதரவு கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை. எனவே நூற்றுக்கணக்கான நண்பர்கள் இந்த திரையிடலுக்கு வந்து நண்பர் ஹரியை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். சைக்கிளில் தென்னிந்தியா முழுவதையும் சுற்றிவருவது என்கிற கனவை அவர் நனவாக்கிக் கொண்டிருக்கிறார். அவசியம் நண்பர்கள் இந்த ஆவணப்படத்தை தவறவிடாமல் பார்க்க வேண்டும்.

இந்த ஆவணப்படத் திரையிடலுக்கு அடுத்து, ஜெயகாந்தன் நினைவைப் போற்றும் வகையில், ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளியான, யாருக்காக அழுதான் திரைப்படமும் திரையிடப்படவிருக்கிறது. இதில் நாகேஷ் நடித்திருக்கிறார். இரண்டு படங்களையும் பார்த்து நண்பர்கள் விவாதத்தில் பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

www.thamizhstudio.com

Comments are closed.