புதிய எக்ஸைல் : A Visual Treat : நிர்மல்
நான் ஏற்கனவே புதிய எக்ஸைல் நாவலைப் படித்து விட்டேன். சாரு எனக்குக் கொடுத்த பெரும் அன்பு அது. அதைப் படித்தால் ஒரு க்ளாசிக் திரைப்படத்தை பார்த்த உணர்வு வரும். அப்படியென்றால் க்ளாசிக்கைப் பார்க்கும் அளவுக்குப் பொறுமையும் வேண்டும். ஏன் திரைப்படம் என்கிறேன் என்பதைச் சொல்லி விடுகிறேன். இந்த நாவலில் முதலில் வருவது கேசவன் எனும் யானையின் கதை. இந்தக் கதை ஏன் முதலில் வருகிறது? இது நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் என்ன? படங்களில் வசனம் மூலம் உனர்வுகளைச் சொன்னால் … Read more